பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” | சினிமா ஆன பெண் குல தெய்வங்களின் கதை | தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் | மீண்டும் வெளிவரும் 'இதயக்கனி' | ஹாரர், திரில்லராக உருவாகும் 'தி பிளாக் பைபிள்' | பிளாஷ்பேக் : பாடல்களுக்காக உருவான படம் | பிளாஷ்பேக் : முதல் படத்திலேயே நீக்கப்பட்ட எஸ்.எஸ்.ராஜேந்திரன் காட்சிகள் | பிக் பாஸ் தெலுங்கு : தொகுப்பாளராகத் தொடரும் நாகார்ஜுனா | 'கேம் சேஞ்ஜர்' தோல்விக்குப் பிறகான விரிசல் | மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் |
தெலுங்கில் தற்போது வம்சி இயக்கி வரும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்று முதல் ஐதராபாத்தில் தொடங்கி இருக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக நேற்று விஜய் சென்னையில் இருந்து ஐதராபாத்துக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார். அப்போது விஜய் விமானத்துக்குள் சென்றபோது தான் நடிக்கும் தெலுங்கு படத்தின் படப்பிடிப்புக்காக ஐதராபாத்துக்கு சென்ற வரலட்சுமி அவரது பக்கத்து சீட்டில் அமர்ந்திருக்கிறார். எதிர்பாராதவிதமாக விஜய்யை பார்த்ததும் மிகப்பெரிய அளவில் மகிழ்ச்சி அடைந்த வரலட்சுமி, அவர் இருக்கையில் அமர்ந்ததும் அவருடன் எடுத்துக் கொண்ட செல்பிகளை பதிவிட்டுள்ளார். அதோடு விஜய்யுடன் சென்னையில் இருந்து ஐதராபாத்துக்கு பயணம் செய்தது தனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது என்றும் பதிவிட்டுள்ளார் வரலட்சுமி. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்க்கார் படத்தில் வரலட்சுமி ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.