மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் | இன்று முதல் ‛இட்லி கடை' டப்பிங் பணி துவங்குகிறது | ஜெய்யின் ‛சட்டென்று மாறுது வானிலை' | பிளாஷ்பேக் : உச்ச நட்சத்திரம் என்ற பட்டத்திற்கு அச்சாரமிட்ட ரஜினியின் “பைரவி” | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் | 'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் | பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் |
இசையமைப்பாளர் இளையராஜா கடந்த சில தினங்களுக்கு முன்பு புதாபெஸ்ட் என்ற நகருக்கு இசை நிகழ்ச்சி நடத்த சென்றிருந்தார். அதேபோல் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் கனடா நாட்டில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்த சென்றிருந்தார். இந்த நிலையில் அவர்கள் இருவரும் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு சென்னை திரும்பி உள்ளனர். அப்போது இருவரும் ஒரே நேரத்தில் சென்னை விமான நிலையத்தை வந்து அடைந்திருக்கிறார்கள். அப்போது இளையராஜாவுடன் இணைந்து தான் எடுத்துக் கொண்ட செல்பி வீடியோவை பகிர்ந்து, ‛‛நாங்கள் இருவரும் வெவ்வேறு கண்டங்களில் இருந்து வருகிறோம். ஆனால் நாங்கள் சேருமிடம் தமிழ்நாடு தான்'' என்று பதிவிட்டுள்ளார் ரஹ்மான்.