டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி | லோகேஷ் கனகராஜ், அமீர் கான் படம், பேச்சுவார்த்தையில்… | வெளியீட்டிற்குத் தடை இருந்தாலும் இன்று 'வா வாத்தியார்' நிகழ்ச்சி | ஜப்பானில் வெளியாகும் புஷ்பா 2 | தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த சுராஜ் வெஞ்சாரமூடு | டாக்சிக் படத்தில் இரண்டு இசையமைப்பாளர்கள் | தொடர் சிக்கலில் சிங்கிள் தியேட்டர்கள் : விடிவுகாலம் பிறக்குமா? | 23வது சென்னை திரைப்பட விழாவில் தமிழ் 12 படங்கள் | ஒரே ஒரு ஹிட்டுக்காக காத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் | தமிழை விட்டு விலகி செல்கிறாரா சூர்யா? |

‛லத்தி' படத்தில் நடித்து முடித்துள்ள விஷால் அடுத்தப்படியாக ‛மார்க் ஆண்டனி' என்ற படத்தில் நடிக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இதில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். அதிரடி ஆக் ஷன் படமாக உருவாகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். நாயகன் விஷாலுக்கு இன்று பிறந்தநாள், அதையொட்டி இந்த போஸ்டர் வெளியாகி உள்ளது. அதில் கைதி படத்தில் வரும் கார்த்தி போன்று நீண்ட தாடியுடன் விஷால் உள்ளார். மேலும் ஆக்ரோஷமான தோற்றத்தில் கையில் துப்பாக்கி உடன் அவர் காணப்படுகிறார். போஸ்டரின் பின்னணியில் துப்பாக்கிகள், தோட்டாக்கள் இடம் பெற்றுள்ளன. போஸ்டரிலும் வித்தியாசமான லுக்கில் இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.