‛முண்டாசுப்பட்டி' புகழ் நடிகர் ‛மதுரை' மோகன் காலமானார் | பழம்பெரும் நடிகை லீலாவதி காலமானார் | என்னைச் சுற்றி நல்ல ஆண்கள் இல்லை - அனுயா | இவை போதும் : இந்த உலகத்தையே மாற்றிவிடலாம் - சமந்தா | கருணாநிதி நூற்றாண்டு விழா தள்ளிவைப்பு | வாடிவாசல் படத்தில் சூர்யாவுக்கு பதில் அஜித்தா...! - உண்மை என்ன? | தர்ஷன், தர்ஷனா நடிக்கும் புதிய படம் | 'டாக்சிக்' - ரிலீஸ் தேதியுடன் வெளியான யஷ் அடுத்த பட அறிவிப்பு | தனுஷ் இயக்கும் படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் | மம்முட்டிக்கு பதிலாக ஜாக்கி ஷெரப் |
விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன். 2015ம் ஆண்டு சகாப்தம் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் விஜயகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அதன்பிறகு மதுர வீரன் என்ற படத்தில் நடித்தார் அந்தப் படமும் சண்முக பாண்டியனுக்கு கைகொடுக்கவில்லை. தற்போது மித்ரன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் சசிகுமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார். ஏற்கனவே எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி எழுதிய குற்றப்பரம்பரை என்ற நாவலைத் தழுவி சசிகுமார் எடுக்கப்போகும் வெப் தொடரில் சண்முக பாண்டியன் நடிக்க இருப்பதாக செய்தி வெளியான நிலையில், சசிகுமார் - சண்முக பாண்டியன் கூட்டணியில் உருவாகப்போவது படமா அல்லது வெப் தொடரா என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.