'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி உள்பட பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர் புகழ். இவர் திரைப்படங்களில் காமெடி கதாப்பாத்திரங்களிலும் நடித்து வருகிறார். தற்போது புகழ், ‛மிஸ்டர் ஜூ கீப்பர்' என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் என்பதும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புகழ் கடந்த சில ஆண்டுகளாக கோவையை சேர்ந்த பென்சியா என்ற பெண்ணை காதலித்து வந்ததாகவும் விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் தெரிவித்திருந்தார். காதலியின் புகைப்படங்களை அவ்வப்போது சோசியல் மீடியாவில் பகிர்ந்து வந்த புகழ், சமீபத்தில் திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட் ஒன்றையும் நடத்தியுள்ளார்.
இந்த நிலையில் புகழ் தனது காதலி பென்சியாவை வரும் செப்டம்பர் 5ம் தேதி திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களது திருமண பத்திரிகையும் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருவதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.