நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | கணவர் சித்ரவதை செய்வதாக பாலிவுட் நடிகை வழக்கு | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை | தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா | கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் | கதைநாயகன் ஆன பரோட்டா முருகேசன் | இந்த வார ரீ ரிலீஸில், 'அட்டகாசம், அஞ்சான்' | ஓடிடி தளத்திலும் வெளியாகும் 'பாகுபலி தி எபிக்' |

கன்னட சின்னத்திரை உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் அனிருத் ஜட்கர். தற்போது ஆரூர் ஜெகதீஷ் இயக்கத்தில் ஜோதே ஜோதேயாலி என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடர் ஆரம்பதித்த நாளில் இருந்தே அனிருத்துக்கும், இயக்குனருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளனர். சமீபத்தில் அனிருத் இயக்குனருடன் கோபித்துக் கொண்டு படப்பிடிப்பில் இருந்து வெளியேறி விட்டார். இதனால் தயாரிப்பாளருக்கு பல லட்சம் இழப்பு ஏற்பட்டது.
அனிருத் தனக்கு கேரவன் கேட்டு அடம்பிடித்தாக கூறப்படுகிறது. கன்னட சின்னத்திரையில் வெளிப்புற படப்பிடிப்பில் நடிகைகள் உடை மாற்றுவதற்கு மட்டுமே கேரவன் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அனிருத் கேரவன் கேட்டது பிரச்சினை ஆனது. இந்த விவகாரம் கன்னட சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்றது. இதை தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கம் அனிருத்துக்கு 2 ஆண்டுகள் தொடரில் நடிக்க தடை விதித்தது. இதனால் தற்போது நடித்து வரும் அனைத்து தொடர்களில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார். கன்னட சின்னத்திரையில் ஒரு நடிகருக்கு தடை விதிக்கப்படுவது இதுவே முதல்முறை என்கிறார்கள்.