''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு பொதிகை சேனல் ஸ்வராஜ் என்ற தொடரை ஒளிபரப்ப இருக்கிறது. இந்த தொடர் இதுவரை அதிகம் அறியப்படாத சுதரந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கையை பற்றியதாகும்.
இந்த தொடர் வருகிற 20ம் தேதி முதல் 75 வாரங்களுக்கு தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் இரவு 8 மணிக்கு தமிழில் ஒளிபரப்பாக உள்ளது. திங்கட்கிழமை தோறும் பிற்பகல் 3 மணிக்கும், புதன்கிழமை தோறும் மாலை 4 மணிக்கும், வெள்ளிக்கிழமைகளில் இரவு 9 மணிக்கும் மறு ஒளிபரப்பாகிறது.
இந்த தொடர் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை கூறியதாவது: நாடு முழுவதிலும் இருக்கும் விடுதலை போராட்டத்தில் பங்கேற்ற ஆனால் அறியப்படாத 75 போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை 75 வாரங்களுக்கு தொடராக ஒளிபரப்பப்படும். தமிழகத்தை சேர்ந்த வேலுநாச்சியார், புலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற வீரர்களின் வரலாறும் இந்த தொடர்களில் இடம்பெரும். மேலும் விடுதலை போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு குறித்த ஒரு தனிப்பட்ட தொடரும் விரைவில் வெளியாகும் என்றார்.