'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் | பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” | சினிமா ஆன பெண் குல தெய்வங்களின் கதை | தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் | மீண்டும் வெளிவரும் 'இதயக்கனி' | ஹாரர், திரில்லராக உருவாகும் 'தி பிளாக் பைபிள்' | பிளாஷ்பேக் : பாடல்களுக்காக உருவான படம் |
கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற 'பெங்களூர் டேய்ஸ்' படத்தை இயக்கியவர் அஞ்சலி மேனன். அந்த படத்தை தொடர்ந்து கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு பிரித்விராஜ், பார்வதி, நஸ்ரியா ஆகியோரை வைத்து 'கூடே' என்கிற படத்தை இயக்கினார் அஞ்சலி மேனன். முந்தைய படத்தைப்போல இந்த படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தனது அடுத்த படத்தை இயக்குவதற்கு தயாராகி வருகிறார் அஞ்சலி மேனன். இந்தநிலையில் இந்த படத்தில் தான் நடிக்க இருப்பதாக ஒரு பேட்டியில் நடிகை நித்யா மேனன் கூறியுள்ளார்
இதற்கு முன்னதாக அஞ்சலி மேனன் கதை எழுதி, அன்வர் ரஷீத் இயக்கி மிகப்பெரிய வெற்றி பெற்ற உஸ்தாத் ஹோட்டல் என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் நித்யா மேனன். அப்போதிருந்தே இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர். அதைத்தொடர்ந்து அஞ்சலி மேனன் இயக்கிய பெங்களூர் டேய்ஸ் படத்திலும் கொஞ்ச நேரமே வந்து போகும் கதாபாத்திரத்தில் ஜோடியாக நட்புக்காக நடித்திருந்தார் நித்யா மேனன். இந்த நிலையில் தான், அஞ்சலி மேனனின் படத்தில் தான் மீண்டும் கதாநாயகியாக நடிப்பது உறுதிப்படுத்தி உள்ளார் நித்யா மேனன்.