ஜனநாயகன் லீக் ; தவறான குற்றச்சாட்டு : தணிக்கை வாரியம் அறிக்கை | திருட்டுத்தனமான பதிப்புகளை ஆதரிக்காதீர்கள் : ‛ஜனநாயகன்' லீக் பற்றி மமிதா பைஜூ அறிக்கை | ஜெயிலர் 2 படத்தில் பவன் கல்யாண்? | ‛தி பாரடைஸ்' படத்தில் சுப்பு வேடத்தில் கயாடு லோகர் | ஏப்ரல் 24ல் ‛சிவகாசி' உடன் ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | 75 ஆண்டுகளை நிறைவு செய்த 'ஓர் இரவு' | தமிழில் இதற்கு முன்பு 'லீக்' ஆன படங்கள் என்னென்ன தெரியுமா ? | 'துரந்தர்-2 'படத்திற்கு தடைவிதிக்க : நீதிமன்றம் மறுப்பு | அண்ணி மீது ஹன்சிகா வழக்கு | பிளாஷ்பேக் : அபூர்வ சகோதரர்கள் மனோரமாவிற்கு முன் காந்திமதி |

பிக்பாஸ் சீசன்- 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நாயகனாக நடித்த பிரண்ட்ஷிப் மற்றும் கே.எஸ். ரவிக்குமார் தயாரித்த கூகுள் குட்டப்பா போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர் லாஸ்லியா. ஆனால் இவர் நடித்த முதல் இரண்டு படங்களுமே தோல்வி அடைந்துவிட்டன. இதனால் அடுத்தபடியாக லாஸ்லியாவுக்கு புதிய படங்கள் கமிட்டாகவில்லை.
இந்த நிலையில் இதுவரை இல்லாத அளவுக்கு முதன்முறையாக தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் லாஸ்லியா. நடித்த இரண்டு படங்களுமே வெற்றி பெறாததால் அடுத்தபடியாக கவர்ச்சிகரமாக நடிப்பதற்கு தான் தயாராகி விட்டதை இந்த புகைப்படம் மூலம் திரையுலகத்திற்கு சூசகமாக அறிவித்திருக்கிறார் லாஸ்லியா.