'இட்லி கடை' படத்தின் முதல் பாதி ரெடி! | 'தேரே இஸ்க் மெயின்' படத்தில் பிரபுதேவா? | ரஜினியின் 'கூலி' படத்தின் ஹிந்தி பதிப்புக்கு டைட்டில் மாற்றம்! | தலையில் மொட்டை அடித்து கெட்டப்பை மாற்றிய அஜித்குமார்! | கொக்கைன் விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவுக்கு சம்மன் | சிம்புவின் 50வது படம் டிராப்பா? | ரசிகர்கள் விரும்பும் படத்தை கொடுக்கவில்லை: 'தக் லைப்' தோல்விக்கு மன்னிப்பு கேட்ட மணிரத்னம் | ஆக் ஷன் ஹீரோக்கள் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : கஜோல் | 'கேம் சேஞ்ஜர்' படத்துக்கு பச்சைக்கொடி காட்டியிருக்க கூடாது: தயாரிப்பாளர் தில் ராஜூ புலம்பல் | தமிழ்த் தலைப்புகளும், ஆங்கிலத் தலைப்புகளும் மோதும் ஜுன் 27 ரிலீஸ் |
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆலியா பட். நடிகர் ரன்பீர் கபூரைத் திருமணம் செய்து கொண்டு ஒரு பெண் குழந்தைக்கும் தாயானார். திருமணமாகி குழந்தை பெற்ற பின்பும் தனது உடல் அழகை பராமரிப்பதில் மிகுந்த கவனத்துடன் இருக்கிறார் ஆலியா.
பிரபல ஆடை, அலங்கார நிபுணரான சபயசாச்சி முகர்ஜியின் 25வது வருடக் கொண்டாட்டம் சில தினங்களுக்கு முன்பு கொண்டாடப்பட்டது. பல பாலிவுட் நடிகைகள் விதவிதமான ஆடைகளில் கலந்து கொண்டு அசத்தினார்கள். தீபிகா படுகோனே, சோனம் கபூர், ஆலியா பட், அதிதி ராவ் ஹைதரி, அனன்யா பான்டே, ஷபனா ஆஸ்மி, சோபிதா துலிபலா, பிபாஷா பாசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.
அவர்களில் ஆலியா பட் அசத்தலான கிளாமரில் வந்து கலந்து கொண்ட புகைப்படங்களும், போட்டோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன. அவரது கிளாமரான தோற்றம்தான் அதற்குக் காரணம்.