படத்திலிருந்து நீக்கபட்டது குறித்து வருத்தப்பட்ட மகிமா நம்பியார் | சமூக வலைதள கணக்கை நீக்கிய தனுஷ் பட இயக்குனர் | தனது வீட்டின் பணி பெண்ணிற்கு உதவிய அல்லு அர்ஜுன் | நித்யா மேனனுக்கு விட்டுக் கொடுத்த ஜெயம் ரவி | சிம்பு 48வது படம் : தேசிங்கு பெரியசாமியை வாழ்த்திய ரஜினி | இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது : ஞானவேல் ராஜாவுக்கு எதிராக சீறிய சமுத்திரக்கனி | மறைந்த பிரதமர் இந்திரா உடன் உரையாடிய கங்கனா | மாயமான கேரள கப்பலின் பின்னணியில் படம் இயக்கும் ‛2018' பட இயக்குனர் | இயக்குனராக மாறிய ஊர்வசியின் கணவர் | தடைகளை தாண்டி 'துருவ நட்சத்திரம்' வெளிவரும்: கவுதம் மேனன் அறிக்கை |
அமீர்கான், கரீனா கபூர் மற்றும் பலரது நடிப்பில் உருவான 'லால் சிங் சத்தா' படம் இரு தினங்களுக்கு முன்பு வெளிவந்தது. இப்படத்திற்குக் கலவையான விமர்சனங்கள் வந்தாலும், வியாபார ரீதியாக படம் எதிர்பார்த்த வசூலைத் தரவில்லை.
இப்படத்தின் மூலம் தெலுங்கு நடிகரான நாக சைதன்யா ஹிந்தித் திரையுலகில் அறிமுகமாகி உள்ளார். இக்கதாபாத்திரத்தில் முதலில் தமிழ் நடிகரான விஜய் சேதுபதிதான் நடிப்பதாக இருந்தது. ஆனால், கொரானோ தாக்கத்தால் விஜய் சேதுபதியால் மற்ற படங்களில் நடிக்க வேண்டி இருந்ததால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனது. விஜய் சேதுபதிக்கு அமீர்கானே நேரில் சென்று கதை சொன்னார். கதையைக் கேட்டதும் அவரும் நடிக்க சம்மதித்திருந்தார்.
இப்போது படம் வெளிவந்து வரவேற்பைப் பெறாத நிலையில் நாக சைதன்யாவிற்கு படத்தில் பெரிய முக்கியத்துவம் இல்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. அவரது கதாபாத்திரத்தையும் சரியாக சித்தரிக்கவில்லை என்றும் குறையுடன் உள்ளார்கள் அவரது ரசிகர்கள். அமீர்கான் படம், ஹிந்தி அறிமுகம் என்றதும் நடிக்க சம்மதித்த நாக சைதன்யாவிற்கு இப்படம் ஏமாற்றத்தைத்தான் தந்துள்ளது. நல்ல வேளையாக விஜய் சேதுபதி ஜஸ்ட் எஸ்கேப் ஆகியிருக்கிறார்.