பிளாஷ்பேக்: பாடலுக்காக திரைக்கதையை மாற்றிய கே.எஸ்.ரவிகுமார் | பிளாஷ்பேக் : மருங்காபுரி சிவபாக்கியத்தின் நூற்றாண்டு | பிளாஷ்பேக்: 'சிட்டாடெல்' ஆனந்தன் சினிமாவின் 'விஜயபுரி வீரன்' | மாஸ்டர் 2ம் பாகத்தை விரும்பும் லோகேஷ் | ராம் பொத்தினேனி படத்தில் உபேந்திரா | இளையராஜா படத்தை மிஸ் செய்த கார்த்திக் சுப்பராஜ் | பென்ஸ் படம் பூஜையுடன் துவங்கியது | தோனி குறித்து நெகிழ்ந்த மீனாட்சி சவுத்ரி | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் தண்ணீருக்கடியில் அதிரடி சண்டைக்காட்சி | நம் வீரம் மிகுந்த ராணுவத்தை வணங்குகிறேன் : கமல் |
சின்னத்திரை நடிகையான ஹரிப்பிரியா தற்போது 'எதிர்நீச்சல்' தொடரில் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சில சமயங்களில் அந்த தொடரின் நாயகி கதாபாத்திரத்தை விடவும் இவரது கேரக்டரும் நடிப்பும் மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இதனாலேயே இப்போதெல்லாம் ஹரிப்பிரியாவின் ரசிகர் கூட்டம் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. சீரியல் மட்டுமில்லாமல் பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி ஆங்கர் அவதாரமும் எடுத்து வரும் ஹரிப்பிரியா, தற்போது சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் உள்ள கேமராவை ஆப்ரேட் செய்வது போல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதன் கேப்ஷனில் 'வெறித்தனமான சினிமா பைத்தியம்' என்று குறிப்பிட்டு, தனக்கு சினிமா மீதும், கேமரா மீதும் இருக்கும் காதலை வெளிப்படுத்தியுள்ளார். ஏற்கனவே, நடிப்பு, டான்ஸ், ஆங்கரிங் என கலக்கி வரும் ஹரிப்பிரியாவுக்கு ஒளிப்பதிவாளராகும் ஆசையும் இருக்கிறதா? என்று அவரது ஆர்வத்தை கண்டு ரசிகர்கள் பாரட்டி வருகின்றனர்.