அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
கடந்த வாரம் துல்கர் சல்மான் தெலுங்கில் நடித்துள்ள சீதா ராமம் என்கிற படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக மிருணாள் தாக்கூர் மற்றும் முக்கிய வேடத்தில் ராஷ்மிகா மந்தனா இருவரும் நடித்துள்ளனர். இந்த படத்தை ஹனுராகவபுடி என்பவர் இயக்கியுள்ளார். 1970களில் ராணுவ பின்னணியில் நடக்கும் காதல் கதையாக இந்த படம் வித்தியாசமான கோணத்தில் சொல்லப்பட்டிருந்தது ரசிகர்களை ரொம்பவே கவர்ந்து விட்டது.
பொதுவாகவே அரபு நாடுகளில் துல்கர் சல்மானின் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு உண்டு. அதேசமயம் சீதாராமம் என வைக்கப்பட்டிருந்த இந்த படத்தின் டைட்டில் சென்சிட்டிவாக இருந்ததால் இந்தப்படம் ஐக்கிய அரபு நாடுகளில் வெளியிட தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அங்கே உள்ள சென்சார் போர்டு இந்த படத்தை வெளியிடலாம் என சான்றிதழ் அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து இன்று (ஆக-11) முதல் தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் சீதாராமம் ஐக்கிய அரபு நாடுகளில் வெளியாகிறது.