'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தெலுங்குத் திரையுலகத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் ராஷ்மிகா தற்போது தமிழில் விஜய் ஜோடியாக 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். ஹிந்தியிலும் சில படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். ராஷ்மிகா இரண்டாம் கதாநாயகியாக நடித்த 'சீதா ராமம்' படம் கடந்த வாரம் வெளிவந்தது. இரண்டாம் கதாநாயகி என்றாலும் படத்தின் திரைக்கதையை நகர்த்தும் முக்கிய கதாபாத்திரம் அது.
ராஷ்மிகா நடித்து இந்த ஆண்டில் வெளிவந்த முதல் வெற்றிப் படம் இது. அவர் நடித்து இதற்கு முன் வெளிவந்த 'ஆடவல்லு மீக்கு ஜோஹார்லு' படம் தோல்விப் படமாக அமைந்தது. எனவே, 'சீதா ராமம்' வெற்றியில் ராஷ்மிகாவும் மகிழ்ச்சியில் உள்ளார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் படத்தின் வெற்றி குறித்து பேசுகையில், “சீதா ராமம் வெற்றி எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக படக்குழு மிகவும் கடுமையாக உழைத்தார்கள். அனைவருமே இப்படம் வெற்றி பெறும் என்று நம்பினார்கள்,” என்று தெரிவித்துள்ளார். மேலும், அவர் எந்த மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசையாக உள்ளார் என்ற கேள்விக்கு, “ஒரு சரித்திரப் படத்தில் நடிக்க வேண்டும் என்றும், விளையாட்டை மையமாகக் கொண்ட படத்தில் நடிக்க வேண்டும் என்றும், ஒரு பயோபிக் படத்தில் நடிக்க வேண்டும்,” என்றும் தெரிவித்துள்ளார்.
அம்மாதிரியான கதைகள் வைத்துள்ளவர்கள் ராஷ்மிகாவை அணுகினால் அவரது கால்ஷீட் நிச்சயம் கிடைக்கும். அதே சமயம் அவரது சம்பளம் 4 கோடி என்பதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.