பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
ஹிந்தியில் ஆமீர்கான், கரீனா கபூர், நாகசைதன்யா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் லால் சிங் சத்தா. இந்த படம் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாகிறது. ராணுவ வீரர்களின் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் ஆமீர்கானின் நண்பராக தெலுங்கு நடிகர் நாகசைதன்யா நடித்திருக்கிறார். இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் ஆமீர்கானை போலவே நாக சைதன்யாவும் பங்கேற்று வருகிறார்.
இந்நிகழ்ச்சியில் லால் சிங் சத்தா படத்தில் நீங்கள் நடித்திருக்கும் வேடத்தில் முதலில் கமிட்டாகி இருந்த விஜய் சேதுபதி விலகியதற்கான காரணம் என்ன? என்று அவரிடத்தில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நாகசைதன்யா கூறுகையில், இந்த படத்தில் ஆமீர்கானின் நண்பராக முதலில் விஜய் சேதுபதி தான் ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால் லால் சிங் சத்தா படத்தின் படப்பிடிப்பு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீட்டிக்கப்பட்டதால், பல படங்களில் பிசியாக நடித்து வரும் விஜய் சேதுபதியால் இப்படத்திற்கு அவர்கள் கேட்ட தேதியில் கால்சீட் கொடுக்க முடியவில்லை. அதன் காரணமாகவே இந்த படத்தில் இருந்து அவர் விலகிக்கொண்டார். அப்படி அவர் விலகியதன் காரணமாகவே அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இப்படத்திலும் நான் ஒரு தெலுங்கு பேசும் ஆந்திரா பையனாகவே நடித்துள்ளேன் என்று தெரிவித்திருக்கிறார் நாகசைதன்யா.