மீண்டும் மாதவனுக்கு ஜோடியாகும் கங்கனா | ப்ரோ படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் பாலிவுட் நடிகை | ஷாருக்கான் குறித்து நெகிழும் பிரியாமணி | மீண்டும் கதாநாயகனாகும் பிரபல நடிகர் | வித்தைக்காரன் படத்தின் டப்பிங் பணிகளை துவங்கிய சதீஷ் | பழம்பெரும் ஹிந்தி நடிகை சுலோச்சனா லட்கர் மறைவு : பிரதமர் இரங்கல் | தமிழ் சினிமாவில் மீண்டும் த்ரிஷா அலை | ஜுன் 9ம் தேதி போட்டியில் 'போர் தொழில், டக்கர்' | பானி பூரி: தமிழில் தயாராகும் புதிய வெப் தொடர் | சினிமா ஆகிறது முதல் போஸ்ட்மேன் கதை |
சென்னை: சமீபத்தில் நடந்த ரெய்டில், திரைத்துறையினரின் கணக்கில் வராத ரூ.200 கோடி வருமானத்தை மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
சினிமா தயாரிப்பாளர்கள் அன்புச்செழியன், கலைப்புலி தாணு, ஞானவேல்ராஜா, தியாகராஜன் மற்றும் எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் வீடுகள், அலுவலகங்களில், வருமான வரித் துறையினர் 4 நாட்களாக அதிரடி 'ரெய்டு' நடத்தினர். சென்னை, மதுரையில் 40 இடங்களில் சல்லடை போட்டு தேடினர்.
இந்த சோதனை தொடர்பாக வருமான வரித்துறை வெளியிட்ட அறிக்கை: சோதனையில், கணக்கில் வராத ரூ.200 கோடி வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரொக்கம் ரூ.36 கோடி மற்றும் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கநகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அன்புச்செழியன் தொடர்புடைய இடங்களில், தியேட்டர் வருமானத்தை குறைத்து காண்பித்து பல கோடி வருமானத்தை மறைத்ததற்கான ஆவணங்கள், பல தயாரிப்பு நிறுவனங்களுக்கு கொடுத்த கணக்கில் வராத கடன்கள், பிராமிசரி நோட்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சோதனையின் போது, கணக்கில் காட்டப்படாத பணப்பரிவர்த்தனைகள் மற்றும் முதலீடுகள் தொடர்பான ஆவணங்கள் , டிஜிட்டல் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. ரகசிய மற்றும் மறைத்து வைக்கப்பட்ட சொத்துகளும் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.