பி.ஜி.ஆர் கிரியேஷன்ஸ் சார்பில், ப்ரியா பாலு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, தயாரித்து வரும் படம் "சீரடி சாய்பாபா மகிமை". ரவிக்குமார் சாய் பாபாவாக நடிக்கிறார். ஹரிகாந்த் ஒளிப்பதிவு செய்கிறார். அபிஜோஜோ இசை அமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் ப்ரியா பாலு கூறியதாவது: நூறாண்டுகளுக்கு முன் சாய்பாபா மனித உருவில் வாழ்ந்த காலத்தில், அவர் நிகழ்த்திய அற்புதங்கள் இந்தப் படத்தில் தத்ரூபமாக, அவர் நடமாடிய இடங்களிலேயே எடுக்கப்படுகிறது. படத்தில் சாய்பாபாவாக நடிக்கும் ரவிகுமார் உள்ளிட்ட அனைவரும் ஷீரடி சென்று பாபாவை தரிசித்து விரதம் இருந்து படத்தின் பணிகளில் ஈடுபட்டுள்ளோம். படம் திரைக்கு வரும் போது ரசிகர்களும் பக்தி பரவசம் அடைவது உறுதி. என்கிறார் இயக்குனர் ப்ரியா பாலு.