2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

ஹிந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற ஆர்ட்டிகள் 15 படம் தமிழில் நெஞ்சுக்கு நீதி என்ற பெயரில் ரீமேக் ஆனது. இதனை போனி கபூர் தயாரித்திருந்தார், அருண்ராஜா காமராஜ் இயக்கி இருந்தார். உதயநிதி ஸ்டாலின், தான்யா ரவிச்சந்திரன், ஆரி அர்ஜுனன், ஷிவானி ராஜசேகர் நடித்திருந்தார்கள். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருந்தார். திபு நினன் தாமஸ் இசை அமைத்திருந்தார்.
ஆதிக்க சாதியினரால் படுகொலை செய்யப்பட்ட தலித் சிறுமிகளுக்காக போராடும் ஒரு போலீஸ் அதிகாரியின் கதை. இந்த படம் கடந்த மே மாதம் 20ம் தேதி தியேட்டர்களில் வெளியாகி ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்தப் படம் வருகிற ஆகஸ்ட் 15 அன்று சுந்திரதின சிறப்பு திரைப்படமாக கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.