ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் பட ரிலீஸ் எப்போது? | எங்களை பிரித்தது அந்த மூன்றாவது நபரே : கெனிஷாவை சாடும் ஆர்த்தி ரவி | ஹிந்தி பட ரீமேக்கில் நடிக்கும் துருவ் விக்ரம் | சந்தானத்தை பின்னுக்கு தள்ளிய சூரி | அமெரிக்காவில் தெலுங்கு கலாச்சார விழாவில் பங்கேற்கும் அல்லு அர்ஜுன் | ''எல்லாமே முதன்முறை... பிகினியும் கூட...'': 'வார் 2' பற்றி கியாரா அத்வானி | மணிரத்னம் படத்தில் ருக்மணி வசந்த் | ஆதி படத்தில் இணையும் மிஷ்கின்? | மே 23ம் தேதியிலும் அதிகப் படங்கள் ரிலீஸ் | வழக்கமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை : பிக்பாஸ் அர்ச்சனா |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய்சேதுபதி, பஹத் பாசில் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அது மட்டுமல்ல அந்த படத்தில் சின்னச்சின்ன கதாபாத்திரங்களில் நடித்த பலரையும் ரசிகர்களிடம் வெளிச்சம் போட்டு காட்டியது. அந்த வகையில் அந்த படத்தில் ஏஜென்ட் டீனா என்கிற கதாபாத்திரத்தில் நடித்த வசந்தி என்பவர் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றார். குறிப்பாக வேலைக்காரி வள்ளியம்மாவாக இருந்து ஏஜென்ட் டீனாவாக அவர் மாறுவதும், அதிரடி சண்டைக்காட்சிகளில் மிரட்டியதும் என ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார் ஏஜென்ட் டீனா.
இதற்கு முன் குரூப் டான்ஸர்களில் ஒருவராக இருந்து பல வருடங்களாக திரையுலகில் பயணித்தாலும் விக்ரம் படம் தான் அவர் மீது வெளிச்சம் பாய்ச்சி உள்ளது. இதன் உடனடி பலனாக மலையாளத்தில் மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனரான பி.உன்னிகிருஷ்ணன் மம்முட்டியை வைத்து இயக்கி வரும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஏஜென்ட் டீனா என்கிற வசந்தி.
இந்த படத்தின் படப்பிடிப்பின் போது மம்முட்டியுடன் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.