‛‛நாங்கள் பரம எதிரிகள் கிடையாது. ஆனால்...'': தனுஷ் பற்றி மனம்திறந்த நயன்தாரா | 5 மொழிகளில் வெளியாகும் அய்யப்பன் படம் | பிளாஷ்பேக் : மோகனை முழுமையான ஹீரோவாக்கிய 'கிளிஞ்சல்கள்' | சீரியல் நடிகை கீதாஞ்சலிக்கு ஆண் குழந்தை! குவியும் வாழ்த்துகள் | புஷ்பா 2 - தமிழகத்தில் 50 கோடி வசூல் | தன் மீதான வழக்கை ரத்து செய்ய அல்லு அர்ஜுன் மனு | பிளாஷ்பேக் : அன்புள்ள ரஜினிகாந்த் | திரைப்பட கூட்டமைப்பின் துணை தலைவராக ஐசரி கணேஷ் தேர்வு | சீனு ராமசாமி மனைவியை பிரிவதாக அறிவிப்பு | சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் - சாய் பல்லவி கோபம் |
முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகி உள்ள விருமன் படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நடந்தது. இதில் பங்கேற்ற முத்தையா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி :
பண்பாடு மாறாமல் மண் சார்ந்த மரபுகளம் மாறாத படம் இது. குடும்ப உறவுகளை எடுத்துரைக்க கூடிய திரைப்படமாக விருமன் திரைப்படம் அமையும். இதுவரை ஆடியோ ரிலீஸ் வைக்காத நிலையில் இந்த படத்திற்கு ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியை மதுரையில் வைத்துள்ளேன். நான் பிறந்த மதுரை மண்ணில் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி வைத்திருப்பது பெருமையாக உள்ளது. நான் சினிமாவில் ரசித்தவர்கள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். நான் இது போன்ற மண்சார்ந்த கதைக்களத்தை கடந்து திரைப்படம் ஆசைப்படுகிறேன். இயக்குனராக எனக்கே என்னுடைய படங்கள் போட்டியாக உள்ளது. என்னுடைய திரைப்படம் எந்த பின்புலமும் இன்றி எடுக்கப்படுகிறது. சிலர் பின்புலம் இருப்பதாக தவறுதலாக புரிந்து கொண்டுள்ளனர். மொழி போன்ற படங்களை எடுக்க எனக்கும் ஆசை தான். ஆனால் என்னிடம் வரும் ஹீரோக்கள் மண்சார்ந்த படங்களை இயக்குவதற்கே விரும்புகின்றனர்.