போர் சூழலுக்கு மத்தியில் சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார் | பிரியா பவானி சங்கரை தொடர்ந்து ரவிதேஜா படத்தில் இணைந்த தமன்னா! | இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் நடிக்கும் குமரன் | சூப்பர் நேச்சுரல் கிரைம் திரில்லராக உருவாகும் 'மண்டவெட்டி' | தனுசுக்கு ஜோடியாகும் நடிக்கும் ருக்மணி வசந்த்! | 'ஆர்யா 40' படத்தில் இரு நாயகிகள் | 'டென்ஷன்' படத்தில் காமெடி கலந்த வில்லனாக ஆர்.கே.வரதராஜ் | 'ஜெயிலர் 2' படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரம் என்ன தெரியுமா? | அனிமேஷன் படத்தை இயக்குகிறாரா அனில் ரவிபுடி? | ரஜினி, கமல் படத்தின் ரிலீஸ் தேதியை குறிவைத்த படக்குழு! |

நடிகர் விஜய் தற்போது தெலுங்கு பட இயக்குனர் வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக வரும் வாரிசு படத்தில் நடிக்கிறார் . இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார்.
விஜய்க்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் சரத்குமார், ஷாம், பிரபு, யோகிபாபு ஆகியோர் இப்படத்தில் இணைந்து நடிக்கின்றனர். இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் அடுத்தடுத்த கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் நடிக்கும் விஜய், விஜய் ராஜேந்திரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே ஐதராபாத் மற்றும் சென்னை என போன்ற இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ள நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சில நாட்களில் விசாகப்பட்டினத்தில் தொடங்கவுள்ளது. இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.