'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் திருச்சிற்றம்பலம். இந்த படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, பாரதி ராஜா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். 7 ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படம் ஆகஸ்ட் 18ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தின் பிரமாண்ட இசைவெளியீட்டு விழா நேற்று சென்னையில் தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வெற்றிமாறன் மற்றும் பல்வேறு பிரபலங்கள் கலந்துக்கொண்டனர். இதில் பேசிய அனிருத், டிஎன்ஏ (டி-தனுஷ், ஏ-அனிருத்) கூட்டணியில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் பாடலுக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்துள்ளனர். அந்த 'டி' இல்லன்னா இந்த 'ஏ' இல்லை என்று குறிப்பிட்டு பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.