ஆண் ஆதிக்கம் இருப்பது கசப்பான உண்மை : கீர்த்தி சுரேஷ் | 'ஆண் பாவம் பொல்லாதது'..... முதல் பட்டியலில் நீளும் ஓடிடி ரிலீஸ்...! | சிக்கலில் இருந்து மீண்ட ‛கருப்பு' | விஜய் தேவரகொண்டா படத்தில் ‛தி மம்மி' பட வில்லன் | லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தின் அப்டேட் | கிரிக்கெட்டர் ஸ்ரீகாந்த் மகன் அனிருத்தா உடன் நடிகை சம்யுக்தா திருமணம் | காசியில் தனுஷ்: கங்கைக்கு ஆரத்தி எடுத்து பிரார்த்தனை | ரீரிலீஸ் படத்துக்கு ஆதரவு கொடுக்காத ஹீரோக்கள் | 'நிஞ்சா' பட பூஜையில் நாய்: ஏன் தெரியுமா? | டேனியல் பாலாஜி இறந்தவிட்டார் என நம்ப முடியல: பிபி180 இயக்குனர் வேதனை |

நமீதா மாரிமுத்து திருநங்கை சமூகத்தை சேர்ந்த பிரபல மாடர்ன் அழகி ஆவார். பேஷன் ஷோ, மாடலிங், சினிமா ஆகிய துறைகளில் ஆக்டிவாக பயணித்துக் கொண்டிருக்கும் நமீதா, திருநங்கையர்களுக்கான அழகி போட்டியில் கலந்து கொண்டு பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி நேயர்களின் மனதை கவர்ந்தார். பிக்பாஸ் வீட்டினுள் அவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவின் காரணமாக போட்டியின் பாதியிலேயே வெளியேறினார். இதனால் ரசிகர்களும் ஏமாற்றமடைந்தனர்.
இந்நிலையில், அவர் கடந்த மாதம் தாய்லாந்தில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான 'மிஸ் இண்டர்நேஷனல் குயின் - 2022' போட்டியில் கலந்துகொண்டு 'மோஸ்ட் பாப்புலர் வோட்' என்ற விருதினை பெற்றுள்ளார். மேலும், டாப் 10 பட்டியலில் 8வது இடத்தையும் பிடித்துள்ளார். அந்த போட்டியில் இந்தியாவின் சார்பாக கலந்து கொண்ட நமீதா மாரிமுத்து இந்திய கடவுளான அர்த்தநாரீஸ்வரர் கெட்டப்பில் நடந்து வரும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.