ஜெயம் ரவியை வைத்து இரண்டு இரண்டாம் பாக படங்களை இயக்கும் மோகன் ராஜா | படைப்பாளிகளை அவமதிக்கும் செயல் : ஞானவேல் ராஜாவிற்கு பாரதிராஜா கண்டனம் | ஹிந்தி படத்தை இயக்கும் அஜய் ஞானமுத்து | சொந்த வீடு கனவை நனவாக்கிய சரண்யா | கன்னடத்தில் ஹீரோயினாக வரவேற்பு பெற்ற தமிழ் சீரியல் நடிகை | கார்த்தியுடன் நடிக்கும் சீரியல் நடிகை | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் மகேஷ் பாபு? | கங்குவா படத்தில் ராணா? | தெலுங்கைத் தொடர்ந்து தமிழில் ரீ ரிலீஸ் ஆகும் முத்து | மகாநதி தொடரில் என்ட்ரி கொடுக்கும் திவ்யா கணேஷ் |
தமிழ் சினிமாவில் தரமான சில படங்களைக் கொடுத்த இயக்குனராக முன்னணியில் இருந்தவர் ஏஆர் முருகதாஸ். ரஜினிகாந்த் நடிப்பில் அவர் இயக்கிய 'தர்பார்' படம் எதிர்பாராத விதமாக தோல்வியடைந்தது. அதற்குப் பிறகு விஜய் நடிக்கும் படத்தை இயக்குவதாக இருந்தார். ஆனால், அந்தப் படமும் டிராப் செய்யப்பட்டது. அதன்பிறகு அவர் அனிமேஷன் படம் ஒன்றை இயக்கி வருகிறார் என்ற தகவல் வெளியானது.
இருந்தாலும் முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கும் தீவிர முயற்சியில் அவர் இருந்து வந்தார். சமீபத்தில் அவர் சொன்ன கதை ஒன்றைக் கேட்ட சிம்பு நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை பிரபல கார்ப்பரேட் நிறுவனம் ஒன்று தயாரிக்க முன் வந்துள்ளதாம். சிம்பு தற்போது 'பத்து தல' படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் முருகதாஸ் இயக்கும் படம் ஆரம்பமாகலாம் என்கிறார்கள்.
ஏஆர் முருகதாஸ் இயக்குவதாக சில படங்கள் ஆரம்ப கட்ட நிலையில் வந்து பின்னர் டிராப் ஆகியுள்ளன. எனவே, இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு நடக்கும் வரையில் எதுவும் உறுதி இல்லை.