சினிமாவுக்கு முழுக்கு போடுகிறாரா த்ரிஷா... | பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் | விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி | லூசிபர் 2ம் பாகத்தின் டீசர் அப்டேட் | பிறந்தநாளில் பிரமாதம்: உடல் உறுப்புகளை தானம் செய்தார் டி.இமான் | கும்பமேளாவில் பாசி மணி ஊசி விற்றவர் : சினிமா நடிகை ஆகிறார் மோனலிசா | பிளாஷ்பேக் : கடைசி வரை அப்பா, தாத்தாவாக நடித்த வி.எஸ்.ராகவன் | துணை நடிகர் ஜெயசீலன் காலமானார் | பிளாஷ்பேக் : தேசிய விருதை இழந்த மீனா | விஷால் உடல்நலம் குறித்து அவதூறு : 3 யு-டியூப் சேனல்கள் மீது வழக்கு |
சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் மற்றும் பலர் நடித்த 'புஷ்பா' படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் வெளிவந்து நல்ல வெற்றியைப் பெற்றது. தெலுங்கில் தயாரான இந்தப் படம் தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் ஆகி வெற்றி பெற்றது.
இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதமே ஆரம்பமாகும் என்றார்கள். ஆனால், முதல் பாகத்திற்குக் கிடைத்த வரவேற்பால் இரண்டாம் பாகத்தை இன்னும் சிறப்பாகக் கொடுக்க வேண்டும் என இயக்குனர் சுகுமார், அல்லு அர்ஜுன் திட்டமிட்டனர். அதன்படி இரண்டாம் பாகத்திற்கு மேலும் மெருகூட்ட கதையைக் கொஞ்சம் மாற்றி எழுத ஆரம்பித்தார் சுகுமார். இதற்காக சில மாதங்களை அவர் எடுத்துக் கொண்டார்.
இந்த நிலையில் 'புஷ்பா' படத்தின் இரண்டாம் பாகம் 10 மொழிகளில் உருவாக இருப்பதாகவும் இந்திய மொழிகள் மட்டுமின்றி வெளிநாட்டு மொழிகளில் உருவாக இருப்பதால் இந்த படம் பான்-வேர்ல்ட் திரைப்படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.