Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கருத்து சுதந்திரம் முழுமையாக இல்லை: ரேகா நாயர்

24 ஜூலை, 2022 - 11:41 IST
எழுத்தின் அளவு:
Rekha-Nair-Exclusive-Interview

உண்மையை உரக்க பேசும் துணிச்சல், நினைத்ததை பளிச்சென எழுதும் எழுச்சி, பார்வையில் தெறிக்கும் நேர்மை தீ... என பல கலைகளில் கலந்தபடி பயணிக்கும் நடிகை ரேகா நாயர், பார்த்திபன் இயக்கிய ‛இரவின் நிழல்' படத்தில் பிணமாக நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இது குறித்து மனம் திறக்கிறார்...

எழுத்தில் துவங்கி நடிப்பு வரை உங்கள் பயணம்?
பள்ளி காலங்களில் எழுத்து, பேச்சு என பயணித்தேன். அதற்கு கிடைத்த அங்கீகாரம் என்னை கவிதை எழுத தூண்டியது. 12ம் வகுப்பில் அகில இந்திய வானொலி ‛சாதனை கவிஞர்' பட்டம் வழங்கியது. பின் பட்டிமன்ற பேச்சாளர், டிவி செய்தி வாசிப்பாளர், தொகுப்பாளர் என பல கட்டங்களை தாண்டி கேரளாவின் நடிப்பு பட்டறை அனுபவங்களை வைத்து டிவி, சினிமாவில் நடிக்க துவங்கினேன்.

கேரளாவை சேர்ந்த ரேகாவுக்கு தமிழ் மொழி ஈர்ப்பு எப்படி?
என் அப்பா சிவன் கேரளாவில் இருநு்து வாழ வழி தேடி தான் தமிழகம் வந்தார். தமிழகத்தில் நான் வசித்த பகுதியில் இருந்த ஒரு மலையாள பள்ளியில் கட்டணம் அதிகமாக இருந்ததால் தமிழ் பள்ளியில் படிக்க வைத்தார். அதனால் தமிழ் மொழியால் ஈர்க்கப்பட்டேன். தமிழ் வழியில் பி.லிட்., எம்.ஏ., என 13 டிகிரி வரை படித்துள்ளேன்.

சமூக சீர்கேடுகளை எதிர்த்து பேசும் துணிச்சல் எப்படி வந்தது?
கேரளாவில் நாங்கள் வசித்த ஊருக்குள் எந்த பிரச்னை நடந்தாலும் பகுதி மக்கள் அப்பாவிடம் முறையிடுவர். அவரும் பிரச்னைகளை தீர்த்து வைப்பார். அதை பார்த்து வளர்ந்த எனக்கும் சமூகத்தின் மீது அக்கறை பிறந்தது. சிறு வயதிலேயே சமூக சீர்கேடுகளை எதிர்த்து சிறியளவில் போராடியுள்ளேன்.

சமூக பிரச்னைகள் குறித்து யூ டியூப் தளங்களில் பேசுவது?
நான் எப்போதும் நேர்மை, உண்மை தவறியதில்லை. யார் தவறு செய்தாலும் தைரியமாக சுட்டி காட்டுவேன். நிறைய இடங்களில் பயணிப்பதால் சில விஷயங்களை பேசுகிறேன். ‛இந்த காலத்தில் யார் இப்படி பேசுவார்' என யூ டியூப் தளத்தினர் என்னை பேட்டி காண்கிறார்கள். வெளிப்படையாக பேசுவதால் என்னவெல்லாம் கேட்க வேண்டுமோ அதை கேட்டு காணொலியை பரப்பி பிரபலமாக்கி வருகிறார்கள்.


இயக்குனர், நடிகர் என்பதை தாண்டி பார்த்திபன் குறித்து?
நான் 12ம் வகுப்பு படிக்கும் போது இயக்குனர் பார்த்திபனை ஒரு நிகழ்ச்சியில் பார்த்தேன். அவரது நையாண்டி கலந்த பேச்சு பிடித்தது. என் எழுத்துக்களை எடுத்து என்னையே நுணுக்கமாக மாற்றிக்கொள்ள எனு்னிடம் கூறியிருக்கிறார். அந்த நுணுக்கத்தை எப்படி கண்டுபிடிக்கிறார் என தெரியாது. அவரிடம் ஒரு காந்த சக்தி இருக்கிறது. மூடி மறைத்து பேசுவதை அவர் எதார்த்தமாக பேசுவார்.

‛நிழலின் நிஜம்' பார்த்திபன் இயக்கத்தில் இரவின் நிழல்...?
நான் நடிக்கிறேன் என முன்பே அவருக்கு தெரியாது... சமீபத்தில் போனில் பேசும்போது ஷூட்டிங்கில் இருக்கிறேன் என நான் கூறியபோது தான் நானும் நடிப்பது அவருக்கு தெரியவந்தது. என் படத்தில் நல்ல வாய்ப்பு தருகிறேன் என அபு்போது கூறியது போலவே இரவின் நிழல் படத்தில் கேரக்டர் கொடுத்தார்.

குழந்தையுடன் நிஜ பிணமாகவே நடித்த அந்த அனுபவம்?
அந்த காட்சியில் நான் பிணமாக தான் கிடந்தேன். ஏ.ஆர்.ரஹ்மான் வந்தபோது ‛இது பொம்மையா' என கேட்டார். அந்த அளவு தத்ரூபமாக நடித்ததில் பெருமை. மேக்கப் மேனிடம் போட்டோ எடுக்க நான் கேட்ட போது ‛உங்களை பார்த்தாலே அழுகை வருது' என மறுத்தார். தாயாக குழந்தை பால் குடிக்கிறது என்ற மனநிலை தான் இருந்ததே தவிர வேறு உணர்வுகள் இல்லை. குழந்தையின் கைகளை என் மார்பில் வைக்க படாதபாடு பட்டேன்.

இந்த சமூகம் இன்னும் எப்படியெல்லாம் மாற வேண்டும்?
நிறைய மாற வேண்டும்... எந்த செயலையும் உண்மையாக செய்ய வேண்டும். பெண் கல்வி சுதந்திரம் வேண்டும். இந்த காலத்தில் ஆண்கள் இயந்திரங்களாகவே மாறி விட்டனர். 10 நாட்கள் விடுப்பு எடுத்து, விரும்பி சினிமாக்களை பார்க்க வேண்டும் என்றால் கூட முடியாது. கருத்து சுதந்திரம் கூட முழுமையாக இல்லை. இன்னும் நிறைய தூரம் நாம் பயணிக்க வேண்டும்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
நடிகர், நடிகையர் நிர்வாண 'போஸ்' : தமிழ் சினிமாவில் புதிய கலாச்சாரம்நடிகர், நடிகையர் நிர்வாண 'போஸ்' : ... கைதாகிறாரா பழம்பெரும் நடிகர் 'பயில்வான்' ரங்கநாதன்? கைதாகிறாரா பழம்பெரும் நடிகர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Sunderraj - Tuticorin,இந்தியா
25 ஜூலை, 2022 - 20:45 Report Abuse
Sunderraj Ungalukku eilaya????......kodumai
Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
25 ஜூலை, 2022 - 09:18 Report Abuse
Natarajan Ramanathan பார்த்திபன் ஒரு வக்கிரம் பிடித்தவன்....
Rate this:
Marcopolo - Chennai,இந்தியா
25 ஜூலை, 2022 - 06:36 Report Abuse
Marcopolo நல்ல விஷயங்களுக்கு கருது சுதந்திரம் தேவைதான். உன் போன்ற பஜாரிகளுக்கு அல்ல. நடுரோட்டில் வைத்து ரௌடியதானம் செய்வது கருத்து சுதந்திரமா?
Rate this:
sankar - Nellai,இந்தியா
24 ஜூலை, 2022 - 20:20 Report Abuse
sankar மார்பை காண்பிப்பது எந்தவகையில் கருத்து சுதந்திரம் - அப்படியென்றால் கொலை காட்சியில் உண்மையாகவே கொலை செய்வீர்களா
Rate this:
Girija - Chennai,இந்தியா
24 ஜூலை, 2022 - 17:58 Report Abuse
Girija எப்போ எடுத்த போட்டோ ? புனிதமான நடிப்பிற்கு ஓட்ட செருப்பு அவார்ட் கொடுக்கலாம் . அங்கிள் தன சொந்த மகள்களை அல்லது முன்னாள் மனைவியை இப்படி நடிக்கவைப்பாரா? ஏ ஆர் ரகுமான் மேடையில் இருக்கும் போது இந்த ஒத்த செருப்பு மைக்கை விட்டெறிந்த காரணம் ரகுமான் இந்த படத்திலிருந்து விலகுவதாக சொல்லியதாகவும், அவரை பயமுறுத்த செய்த தந்திரம் என்று அப்போதே ஊடகங்கள் கிசுகிசுத்தது
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in