சீதா மாதாவின் ஆசீர்வாதம் : சாய் பல்லவி மகிழ்ச்சி | பாலிவுட்டில் தென்னிந்திய நடிகர்களுக்கு மரியாதை இல்லையா : பிரியாமணி பதில் | 'பாபநாசம்' படத்தில் என் முதல் சாய்ஸ் ரஜினிதான்: ஜீத்து ஜோசப் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே! | அஜித் பட ஹீரோயின் யார் | சினிமாவில் நடப்பதை மட்டும் பூதக் கண்ணாடி வச்சு பாக்காதீங்க : குஷ்பு காட்டம் | பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் |
நடிகர், நடிகையர் நிர்வாணமாக 'போஸ்' தருவதை பெருமையாக கொண்டாடும் போக்கு, சினிமா வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.
'ஆடை' படத்தில் நடிகை அமலாபால் நிர்வாணமாக நடித்து, பலரையும் அதிர வைத்தார். விரைவில் வெளிவர உள்ள 'பிசாசு 2' படத்தில், ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்துள்ளார். சமீபத்தில் வெளிவந்த 'இரவின் நிழல்' படத்தில், நடிகையர் பிரகிடா மற்றும் ரேகா நாயர் ஆகியோரும் நிர்வாணம் மற்றும் அரை நிர்வாணத்தில் நடித்தனர். கதைக்கு அவசியம் என கூறப்பட்டு, நடிகர், நடிகையர் விரும்பியோ, கட்டாயப்படுத்தப்பட்டோ நடிக்க வைக்கப்படுகின்றனர்.
தற்போது பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், ஆங்கில இதழ் ஒன்றுக்கு நிர்வாணமாக 'போஸ்' கொடுத்துள்ளார். 'இதனால் நான் அசிங்கப்படவில்லை. பார்ப்பவர்களுக்கு தான் தர்மசங்கடமாக இருக்கும்' என்றும், அவர் கூறியிருக்கிறார். அவரை தொடர்ந்து நடிகை கிரணும் நிர்வாண போஸ் கொடுத்து, அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார்.
இந்நிலையில், நடிகர் விஷ்ணு விஷால் அரை நிர்வாணத்தில் போஸ் கொடுத்து, சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், 'நானும் டிரெண்டிங்கில் இணைகிறேன். என் மனைவி ஜுவாலா கட்டா தற்போது போட்டோகிராபராகவும் மாறியுள்ளார்' என, பதிவிட்டுள்ளார்.