இத்தனை வயதிலும் பிகினியில் அசத்தும் ஸ்ரேயா | நான் உயிர் உள்ள மனுஷி - சாய் பல்லவி | மீண்டும் புத்துயிர் பெறும் 'சங்கமித்ரா' | சினிமாவில் வெற்றி தான் முக்கியம் : மணிகண்டன் | நீக் படத்திற்கு எஸ்.ஜே.சூர்யா விமர்சனம் : தனுஷ் நன்றி | முதல் 3 நாட்களில் 12 கோடி வசூலித்த கங்கனாவின் 'எமர்ஜென்சி' | 2025ல் ராஷ்மிகாவின் முதல் படம் பிப்ரவரி 14ல் வெளியாகிறது! | பிரேமலு 2ம் பாகம் அப்டேட் | காதலியை மணந்தார் இயக்குனர் அஜய் ஞானமுத்து | கவுதம் மேனன் இயக்கத்தில் ரவி மோகன் |
தமிழில் மிஷ்கின் இயக்கியுள்ள பிசாசு- 2 படத்தில் நடித்திருக்கும் பூர்ணா, தெலுங்கில் பேக் டோர் படத்திலும், மலையாளத்தில் விரித்தம் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது தெலுங்கில் நானி, கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்து வரும் தசரா என்ற படத்தில் வில்லி வேடத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கிறார் பூர்ணா. இதற்கு முன்பு தெலுங்கில் அகண்டா என்ற படத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக நடித்த பூர்ணா, தமிழில் தலைவி படத்தில் சசிகலா வேடத்தில் நடித்திருந்தார். அதையடுத்து தெலுங்கில் பவர் பிளே என்ற படத்தில் நெகட்டிவ் கலந்த ரோலில் நடித்தவர், தற்போது நானியின் தசரா படத்தில் வில்லியாக நடிக்கிறார். புதுமுக இயக்குனர் ஸ்ரீகாந்த் ஓட்டேலா இயக்கும் இந்த படம் நிலக்கரி சுரங்க பின்னணியை மையமாகக் கொண்ட கதையில் உருவாகி வருகிறது. மேலும், கூடிய சீக்கிரமே பூர்ணா துபாயை சேர்ந்த தொழிலதிபர் சானித் ஆசிப் அலி என்பவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.