மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

தமிழ்த் திரையுலகத்தின் சீனியர் கதாநாயகர்களான கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவருமே நீண்ட கால நெருங்கிய நண்பர்கள். ரஜினிகாந்த் அறிமுகமான 'அபூர்வ ராகங்கள்' படத்தில் கமல்ஹாசன் தான் கதாநாயகன். அதற்குப் பிறகு இருவரும் சில படங்களில் சேர்ந்து நடித்தார்கள். பின்னர், கமல்ஹாசனின் ஆலோசனைப்படி இருவருமே தனித் தனி கதாநாயகர்களாக நடிக்கலாம் என பிரிந்தார்கள்.
40 ஆண்டு காலத்திற்கும் மேலாக இருவரும் இணைந்து நடித்ததில்லை. இப்போது இருவரும் மீண்டும் இணைய உள்ளார்கள் எனத் தகவல். ஆனால், நடிகர்களாக அல்ல, தயாரிப்பாளர்களாக. கமல்ஹாசன் நடித்து வெளிவந்த 'விக்ரம்' படத்திற்கு முன்பாக கமல்ஹாசன் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிக்க ஒரு படத்தின் பேச்சுவார்த்தை ஆரம்பமானது. ஏனோ, சில காரணங்களால் அது நின்று போனது. அதற்குப் பிறகுதான் கமல்ஹாசன் நடிக்க 'விக்ரம்' படத்தை இயக்கினால் லோகேஷ்.
இப்போது மீண்டும் பேச்சுவார்த்தை ஆரம்பமாகி உள்ளதாம். லோகேஷ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க ஒரு படத்தை உருவாக்கப் பேசி வருகிறார்களாம். அதே சமயம், கமல்ஹாசனுடன் அப்படத்தை இணைந்து தயாரிக்க ரஜினி விரும்புவதாகத் தகவல். 'விக்ரம்' படத்திற்காக மட்டும் கமல்ஹாசனுக்கு 300 கோடி வரை வருவாய் கிடைத்துள்ளது. அது போல கமல், ரஜினி, கூட்டணி சேர்ந்தால் அதைவிட அதிகமாக வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவேதான் தானும் தயாரிப்பில் சேருகிறேன் என ரஜினி தரப்பு சொல்கிறதாம். எல்லாம் நல்லபடியாக கூடி வந்தால் விரைவில் அறிவிப்பு வரலாம் எனத் தெரிகிறது.
விஜய் நடிக்க லோகேஷ் இயக்கும் படம் முடிந்த பிறகு, ரஜினி நடிக்க நெல்சன் இயக்கும் படம் முடிந்த பிறகு லோகேஷ், ரஜினி, கமல் படம் ஆரம்பமாகலாம்.