தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! | முதல்முறையாக ஜோடி சேரும் நானி, பூஜா ஹெக்டே | வெங்கடேஷ் ஜோடியான கே.ஜி.எப் நாயகி! | பிப்ரவரி மாதத்தை குறிவைக்கும் இரண்டு வானம் படக்குழு | நவ., 7ல் ‛அதர்ஸ்' படம் ரிலீஸ் | ஓடிடியில் நேரடியாக வெளியான தீபாவளி படம் |
விக்ரம் நடிப்பில் ஆகஸ்ட் 12ம் தேதி கோப்ரா படமும், செப்டம்பர் 30ஆம் தேதி பொன்னியின் செல்வன் படமும் திரைக்கு வர உள்ளன. இந்த நிலையில் இன்றைய தினம் விக்ரம் நடிக்கும் 61வது படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை பா. ரஞ்சித் இயக்குகிறார். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில் இன்று இப்படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது. இதில் விக்ரம், பா. ரஞ்சித், நடிகர்கள் சிவகுமார், ஆர்யா, கலையரசன் இசையமைப்பாளர் ஜிவி. பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டு உள்ளார்கள்.
இந்த படத்தின் கதை, திரைக்கதையை தமிழ் பிரபா எழுத, ஒளிப்பதிவை கிஷோர் குமார் கவனிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த படத்தை எடிட்டர் செல்வா கவனிக்கிறார். சண்டை காட்சிகளை அன்பறிவு அமைக்க, நடனங்களை சாண்டி மேற்கொள்கிறார். இப்படத்தின் பாடல்களை கபிலன், அறிவு, உமாதேவி ஆகியோர் எழுதுகிறார்கள்.