நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் பிரதாப் போத்தன். தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 100 படங்கள் நடித்துள்ளார். வெற்றிவிழா, மைடியர் மார்தாண்டன், சீவலப்பேரி பாண்டி உள்ளிட்ட 12 படங்கள் இயக்கி உள்ளார். சென்னை, கீழ்ப்பாக்கத்தில் வசித்து வந்த பிரதாப் போத்தன் நேற்று காலை அவரது இல்லத்தில் இறந்தார்.



கமல்ஹாசன், கார்த்தி, பிரபு, ராம்குமார், மணிரத்னம், சீனுராமசாமி, பிசிஸ்ரீராம், சத்யராஜ், ரேவதி, பூர்ணிமா பாக்யராஜ், ராஜிவ் மேனன், கனிகா, மனோபாலா, கருணாஸ், வெற்றிமாறன், சின்னி ஜெயந்த், ரகுமான் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் பிரதாப் போத்தனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்தனர்.
பிரதாப் போத்தனின் உடல் இன்று காலை சென்னை, கீழ்பாக்கத்தில் இருந்து அருகில் உள்ள வேலங்காடு மயானத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு இறுதிச்சடங்குகள் நடந்த பின் பிரதாப் போத்தனின் உடல் தகனம் செய்யப்பட்டது.