ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
நடிகர் விஜய் கடந்த 2005ம் ஆண்டு 63 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒரு பிஎம்டபிள்யூ காரை இறக்குமதி செய்தார். அதற்கு நுழைவு வரி செலுத்த வணிகவரித்துறை உத்தரவிட்டிருந்தது. மேலும் கார் இறக்குமதி செய்யப்பட்ட மாதத்தில் இருந்து அபராதமாக இரண்டு சதவீதம் மட்டுமே கணக்கிட வேண்டும். ஆனால் விஜய் வாங்கிய காருக்கு 40% கணக்கிட்டு இருப்பதாக அவர் தரப்பில் கூறப்பட்டது. இதனால் அந்த அபராதத்தை ரத்து செய்ய கோரி விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இன்று நீதிபதி சுரேஷ் குமார் ஒரு தீர்ப்பு வழங்கியுள்ளார்.
அதில், நடிகர் விஜய் இறக்குமதி செய்த காருக்கு 2019 ஜனவரிக்கு முன்னர் முழு நுழைவு வரியை செலுத்தியிருந்தால் அபராதம் விதிக்க கூடாது. 2019 ஜனவரிக்கு பின்னரும் நுழைவு வரியை முழுமையாக செலுத்தியிருக்காவிட்டால் அபராதம் விதிக்கலாம் எனவும் வணிக வரித்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதனால் தொடர்ந்து நடந்து வந்த விஜய்யின் வெளிநாட்டு கார் மீதான வழக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளது.