காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
இந்தியத் திரையுலகத்தில் கடந்த சில மாதங்களில் சிறந்த ஆக்ஷன் படங்களாக 'கேஜிஎப் 2, விக்ரம்' ஆகிய படங்கள் வெளிவந்தன. 'கேஜிஎப் 2' படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இன்றைய இளம் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஒரு இயக்குனராக மாறிவிட்டார். 'விக்ரம்' பட இயக்குனரான லோகேஷ் கனகராஜ் தனது முதல் படத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார்.
'கேஜிஎப், விக்ரம்' இரண்டு படங்களுக்கும் ஸ்டன்ட் மாஸ்டர்களாக வேலை பார்த்த அன்பறிவு, 'விக்ரம்' படத்தின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்ட மேக்கிங் வீடியோ ஒன்றை சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தனர். அதைப் பார்த்த பின் 'கேஜிஎப்' இயக்குனர் பிரசாந்த் நீல் 'விக்ரம்' படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“கமல்ஹாசன் சார், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோரை ஒன்றாகப் பார்ப்பது ஒரு விருந்து. இயக்குனர் லோகேஷ் கனகராஜின் வேலைப் பார்த்து எப்போதும் பெரிதாக வியக்கிறேன். அனிருத், நீங்கள் ஒரு ராக்ஸ்டார். எங்கள் மாஸ்டர்கள் அன்பறிவு பற்றி மிகப் பெருமையாக உள்ளது. உங்களுக்கு மேலும் வெற்றிகள் கிடைக்கட்டும். ரோலக்ஸ், சூர்யா சார், இன்னும் முடியவில்லை. நீங்கள் நெருப்பு,” எனக் குறிப்பிட்டுள்ளார்.