இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
தற்போது தனுஷ் நடிப்பில் தி கிரேமேன் மற்றும் திருச்சிற்றம்பலம் போன்ற படங்கள் ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளன. இதில், தி கிரேமேன் என்ற ஹாலிவுட் படம் ஜூலை 22ஆம் தேதியும், திருச்சிற்றம்பலம் ஆகஸ்ட் 18ஆம் தேதி திரைக்கு வர உள்ளன. மேலும் தற்போது வாத்தி மற்றும் நானே வருவேன் போன்ற படங்களில் நடித்து வருகிறார் தனுஷ். இந்த நிலையில் தி கிரேமேன் படத்தின் புரமோசன் நிகழ்ச்சியில் தனுஷ் கலந்து கொண்ட வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அப்போது நடந்த உரையாடலின்போது, தி கிரேமேன் படத்தில் நீங்கள் எப்படி இணைந்தீர்கள்? என்று தனுஷிடம் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. அதற்கு, இந்த படத்தில் எப்படி வந்தேன் என்று எனக்கு தெரியவில்லை. இந்தியாவில் உள்ள ஒரு கேஸ்டிங் நிறுவனத்திலிருந்து ஹாலிவுட் புராஜெக்ட் இருப்பதாக அழைப்பு வந்தது. அதன் பிறகு இந்த படத்தில் கமிட்டானேன். இது எனக்கு கிடைத்த ஒரு அற்புதமான வாய்ப்பு என்று கூறியிருக்கிறார் தனுஷ். இந்தப் படத்தை ரூஸ்ஸோ சகோதரர்கள் இயக்க, ரியான் கோசுலின் நாயகனாக நடித்திருக்கிறார். அவருடன் தனுஷ், கிரிஷ் எவன்ஸ், ரெஜி ஜீன் பேஜ், ஜெசிகா ஹெல்விக் உள்பட இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.