100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? |
கடந்த, 1984ல், கமல் எழுதிய, தாயம் என்ற கதையை மையமாக வைத்து ஆளவந்தான் படத்தின் திரைக்கதையை உருவாக்கினார் கமல்ஹாசன். கதை, திரைக்கதை, வசனம், நடிப்பு என அனைத்திலும் மிரட்டியிருப்பார் கமல். இயக்கம் சுரேஷ் கிருஷ்ணா என்றாலும், கமலின், டச்தான் படம் முழுதும் இருக்கும்.
தமிழ், ஹிந்தி என இரு மொழிகளில் இப்படம் உருவானது. இப்படத்தில் இடம் பெற்ற, 2டி அனிமேஷன் காட்சிகள், பெரும் பாராட்டுக்களை பெற்றது. தயாரிப்பாளர் கலைப்புலி தாணு முதலில், 7 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இப்படத்தை துவங்கினார். ஆனால் இப்படம், 20 கோடி ரூபாயில் முடிந்தது. அன்றைய காலக்கட்டத்தில், இப்படம் பெரும் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் 3டி முறையில் புதிய வடிவில் ஆளவந்தான் படத்தை கலைப்புலி தாணு விரைவில் வெளியிடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகலாம்.