'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி |
உலக புகழ்பெற்ற காட்பாதர் படத்தில் காட்பாதர் சோனி கோர்வியோனாக நடித்தவர் ஜேம்ஸ் கான். 1963ம் ஆண்டு இர்மா லே டக்ஸ் என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்த அவர் 70க்கும் மேற்பட்ட படங்களிலும், 20க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார்.
ரெட் லைன் 7000, கவுண்டவுன், தி ரெய்ன் பீப்பிள், ராபிட் ரன், சிண்ட்ரல்லா லைப்ரரடி, தி கேம்பளர் உள்ளிட்ட பல புகழ்பெற்ற படங்களில் நடித்தார். காட்பாதர் படத்திற்காக ஆஸ்கர் விருது பெற்றார். காட்பாதர் 2ம் பாகம் மற்றும், கேம்பளர், பன்னி லேடி படங்களில் நடித்தற்காக கோல்டன் குளோப் விருதையும் பெற்றவர்,
82 வயதான ஜேம்ஸ் கான் முதுமைகால நோய்களால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் அவர் மரணம் அடைந்து விட்டதாகவும், அவருக்காக பிரார்த்தனை செய்யுமாறும் அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். ஜேம்ஸ கானின் மரணத்திற்கு ஹாலிவுட் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.