'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா |
சென்னை : நடிகர் விக்ரம்(56) உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விக்ரம். தற்போது கோப்ரா, பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். அடுத்து பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்க போகிறார். மணிரத்னம் இயக்கத்தில் இவர் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் இன்று (ஜூலை 08) மாலை வெளியாக உள்ள நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
என்ன மாதிரியான உடல்நல பிரச்னை என்பது குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. இருப்பினும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தவறான செய்தி பரவி வருகிறது. உண்மையில் கடும் காய்ச்சல் காரணமாக அவர் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் உடல்நலம் தேறி வருகிறார். இன்றோ அல்லது ஓரிரு நாளிலோ அவர் வீடு திரும்புவார் என தெரிகிறது.