'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தனுஷ் சினிமாவில் அறிமுகமான படம் ‛துள்ளுவதோ இளமை'. இந்த படத்திற்கு தனுஷின் அண்ணன் செல்வராகவன் திரைக்கதை எழுத, அப்பா கஸ்தூரிராஜா இயக்கினார். ஷெரின், அபிநய், ஷில்பா உள்பட பலர் நடித்திருந்தார்கள். யுவன் இசை அமைத்திருந்தார்.
2002ம் ஆண்டு வெளியான இந்த படம் 20 வருடங்களுக்கு பிறகு நாளை (ஜூலை 8) டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மீண்டும் தியேட்டரில் வெளியாகிறது. குரு ராஜா இண்டர்நேஷனல் நிறுவனம் இதனை வெளியிடுகிறது. சென்னையில் பிவிஆர், ஈவிபி, மாயாஜால் உள்ளிட்ட மல்டிபிளக்ஸ் திரைகள் உள்பட 25 தியேட்டர்களில் வெளியாகிறது. மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் வெளியாகிறது.