நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? | அபிநட்சத்திரா நடிக்கும் அன்னம் தொடரின் புரோமோ ரிலீஸ் | கார்த்திகை தீபம் சீரியலிலிருந்து விலகிய அயுப் | பிளாஷ்பேக் : 3 இயக்குனர்கள் இயக்கிய புராண படம் | பிளாஷ்பேக் : ஹீரோயின் ஆக நடித்த டி.ஏ.மதுரம் | கோவா திரைப்பட விழாவில் தமிழ் குறும்படம் | 110 நிமிடம் பிணமாக நடித்து பிரபுதேவா சாதனை | முதல்வர் குடும்ப திருமணத்தில் தனுஷ், நயன்தாரா : முகத்தை திருப்பிக் கொண்டு வெறுப்பை காட்டினர் |
இவரது இசையைக் கேட்டால் குழந்தைகளுக்கு தாலாட்டு பாடல் தேவையில்லை. அதேப்போல காதலர்களுக்கு, முதியவர்களுக்கு என அனைத்து தரப்பினருக்கும் இவரது இசை என்றால் கொள்ளை பிரியம். 'இசைஞானி' என உலக தமிழ் ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். 1970களில் துவங்கிய இவரது இசைப்பயணம் இன்றும் தொடர்கிறது. தற்போது ராஜ்சபா எம்பி.,யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரைபற்றிய சிறு குறிப்பு...
இந்தியாவின் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவர் இளையராஜா. 7000 பாடல்கள், 1400 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். பின்னணி இசையில் இவரை மிஞ்சுவதற்கு இசை உலகில் யாருமில்லை என கூறலாம். தென்னிந்திய இசையில் 'போக்' இசையை புகுத்தியவர் இவரே. தேனி மாவட்டம் பண்ணைப்புரத்தில் ராமசாமி - சின்னத்தாயம்மாள் தம்பதிக்கு மகனாக 1943 ஜூன் 2ல் பிறந்தார். இயற்பெயர் டேனியல் ராசைய்யா (எ) ஞானதேசிகன். வயது 79
'அன்னக்கிளி' வாய்ப்பு
'ஓ நெஞ்சமே' நாடகத்துக்கு இவர் இசையமைத்தபோது, 'அன்னக்கிளி' பட கதாசிரியர் செல்வராஜின் நட்பு கிடைத்தது. இவர் பஞ்சு அருணாசலத்திடம் அறிமுகம் செய்து வைத்தார். 1976ல் தன் 33 வயதில் முதல்பட வாய்ப்பான 'அன்னக்கிளி'யை பெற்றார். இப்படம் 100 நாட்களை கடந்தது. மச்சானை பார்த்திங்களா, சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை, அன்னக்கிளியே உன்னை தேடுதே, சுத்தச் சம்பா பச்சரிசி குத்தத்தான் வேணும்...' என அனைத்து பாடல்களும் 'ஹிட்' அடித்தன. தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்த இவர் 5 ஆண்டுகளில் 100 படங்களுக்கு இசை அமைத்து அசத்தினார்.
ஒரே இந்தியர்
1993ல் லண்டனில் உள்ள ராயல் பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்டிராவில் 'சிம்பொனி' ஒன்றை இசையமைத்தார். அங்கு இசையமைப்பவர்களை “மேஸ்ட்ரோ” என அழைப்பர். ஆசியாவிலே முதன் முறையாக சிம்பொனி இசையை அமைத்தார். சிம்பொனி கம்போஸ் பண்ண குறைந்தது ஆறு மாதமாவது ஆகும். வெறும் 13 நாளில் மற்ற கம்போஸர்களை மிரள செய்தவர் இசைஞானி.
30 நிமிடம்
ஒரு பாடலை உருவாக்க வெளிநாட்டுக்கோ, அழகான லொகேஷன்களுக்கு சென்று நாட்கணக்கில் தங்க வேண்டிய அவசியம் இல்லை அவருக்கு. 'தென்றல் வந்து தீண்டும்போது' என்ற பாடலை உருவாக்க எடுத்துக்கொண்டது வெறும் அரைமணி நேரம் தான்.
400
இளையராஜா தன் சொந்தக் குரலில் 400 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.
1000
இவர் இசையமைத்த 100வது படம் 'மூடுபனி'. 500வது படம் 'அஞ்சலி'. 700வது படம் 'எஜமான்'. 1000மாவது படம் தாரை தப்பட்டை. அதிகபட்சமாக கமலுக்கு 60, ரஜினிக்கு 54, பிரபுக்கு 48 படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.
40
தமிழ் திரைப்படங்களில் உச்ச நட்சத்திரங்களின் 100-வது படங்கள் அனைத்தும் இளையராஜாவின் இசையமைப்பில் உருவானவை தான். 1980களில் இளையராஜா மட்டுமே ஒரு ஆண்டுக்கு 40 படங்களுக்கு இசையமைத்து கொண்டிருந்தார்.
சில துளிகள்...
* கண்ணதாசன், வாலி, வைரமுத்து, ஓ.என்.வி.குருப், ஸ்ரீ குமரன் தம்பி, ஷி உதய ஷங்கர், குல்சார் உட்பட அனைத்து இந்திய கவிஞர்கள், பாடலாசிரியர்களுடன் பணியாற்றியுள்ளார்.
* பாரதிராஜா, கே.பாலசந்தர், பாலு மகேந்திரா, எஸ்.பி.முத்துராமன், மகேந்திரன், மணிரத்தினம், பாசில், கே.விஸ்வநாத், சத்யன் அந்திக்காடு, பிரியதர்ஷன், வம்சி, சங்கீதம் ஸ்ரீநிவாச ராவ் உட்பட பல இயக்குனர்களுடன் பணியாற்றி உள்ளார்.
* படத்தின் கதையை கேட்காமல் பாடலுக்கான சூழ்நிலைகளை மட்டும் கேட்டு இசையமைத்த ஒரே படம் கரகாட்டக்காரன்.
* அரை நாளில் மொத்த ரீ-ரெக்கார்டிங்கையும் செய்து முடித்த படம் நூறாவது நாள்.
* இந்தியாவில் கம்ப்யூட்டர் இசையை அறிமுகப்படுத்தியவர் இளையராஜா (புன்னகை மன்னன்).
* இவரது பாடலுக்காக கதை எழுதி வெற்றி கண்ட படங்கள் வைதேகி காத்திருந்தாள், அரண்மனைக்கிளி.
* பருவமே, புதிய பாடல் பாடு என்ற பாடலுக்கு தொடையில் தட்டி தாளத்திற்கு புதிய பரிமாணத்தை கொடுத்தவர்.
* வேலைநேரங்களில் மட்டுமே இசையை யோசிப்பதில்லை. எப்போதும் இசையை பற்றியே நினைத்திருப்பார்.
* 137 வாத்தியங்கள் பயன்படுத்தப்பட்டது தளபதி படத்தில் இடம்பெற்றுள்ள சுந்தரி கண்ணால் ஒரு சேதி என்ற பாடல்.
* 1980களில் எம்.எஸ்.வி., சங்கர் கணேஷ், ரவீந்திரன், ஷியாம், ஜிகே.வெங்கடேஷ், சந்திரபோஸ், டி.ராஜேந்தர், மனோஜ் கியான்... என்று பலர் இசையமைத்து இருந்தாலும் இளையராஜாவின் கையே ஓங்கியிருந்தது.
ஐந்து தேசிய விருது
* பத்மபூஷண் - 2010
* பத்ம விபூஷண் - 2018
* ஐந்து முறை தேசிய விருது (சிந்து பைரவி, தாரை தப்பட்டை -தமிழ், சாகர சங்கமம், ருத்ர வீணா - தெலுங்கு, பழசி ராஜா - மலையாளம்)
* ஆறு முறை தமிழக அரசு திரைப்பட விருது
* கலைமாமணி விருது
* நான்கு பிலிம்பேர் விருது
* ஐந்து நந்தி விருது
* வாழ்நாள் சாதனையாளர் விருது - 2015ல் கோவா சர்வதேச திரைப்பட விழா
* சங்கீத நாடக அகாடமி விருது-2012