'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
சோஷியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருந்து பல சர்ச்சையான கருத்துகளை தைரியமாக பேசி வருகிறார் காஜல் பசுபதி. தொலைக்காட்சி தொகுப்பாளினியாக கேரியரை ஆரம்பித்த காஜல் இன்று வெள்ளித்திரை நடிகையாக ஒரு நல்ல ப்ராஜெக்ட்டுக்காக காத்திருக்கிறார். நடன இயக்குனர் சாண்டியை திருமணம் செய்து வாழ்த்துவந்த காஜல், கருத்து வேறுபாடுகள் காரணமாக சில வருடங்களுக்கு முன் பிரிந்தார். இருப்பினும் சாண்டி மாஸ்டரை தனது எந்த பதிவுகளிலும் காஜல் விட்டுக்கொடுத்து பேசியதேயில்லை.
இந்நிலையில், இன்று பிறந்தாள் கொண்டாடும் தன் முன்னாள் கணவர் சாண்டி மாஸ்டருக்கு காஜல் பசுபதி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 7 வருடங்களுக்கு முன் இருவரும் ஒன்றாக இருந்த போது எடுக்கப்பட்ட போட்டோவை வெளியிட்டுள்ள காஜல் பசுபதி, சாண்டிமேன் என அவரை செல்லமாக அழைத்து 'ஹேப்பி பர்த்டே செல்லமே' என வாழ்த்தியுள்ளார். காஜலை பின் தொடரும் பலரும் காஜலின் புரிதலையும், சாண்டி மாஸ்டர் மீது அவருக்கிருக்கும் பாசத்தையும் வியந்து பார்த்து வருகின்றனர்.