நானி - சாய்பல்லவி படம் ஆஸ்கருக்கு பரிந்துரை | எப்படி இருந்த கீர்த்தி இப்படி | கனடாவிலிருந்து வந்த பாடகி | வருகிறான் ‛சோழா சோழா' | குடும்பத்துடன் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்த சூரி | திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் காட்சியை பார்த்து ரசித்த தனுஷ் | ‛லால் சிங் தத்தா' படத்தை இணையதளத்தில் வெளியிட்ட இரண்டு பேர் கைது | ஹிந்தியில் அறிமுகமாகிறார் அனுபமா பரமேஸ்வரன் | ஆர்ஆர்ஆர் படத்திற்கு 99 சதவீதம் ஆஸ்கர் கிடைக்க வாய்ப்பு : அனுராக் காஷ்யப் கணிப்பு | கிர்த்தி ஷெட்டிக்கு இரண்டாவது அதிர்ச்சி |
'பூவே உனக்காக' சீரியலில் பூவரசி என்ற ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ராதிகா ப்ரீத்தி. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர் சின்னத்திரைக்கு வருவதற்கு முன்னதாகவே கன்னடத்தில் சில படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். ஆனால் எதுவும் வெற்றி படமாக அமையவில்லை.
அதன்பிறகு தமிழில் 2019 ஆம் ஆண்டு 'நாதிரு தின்னா' என்ற படத்தில் நடித்தார். அந்த படம் ரிலீஸாவதில் சிக்கல் எழுந்ததால் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில் தான் ராதிகா ப்ரீத்தி சின்னத்திரையை தேர்ந்தெடுத்தார். ராதிகாவின் அழகிய தோற்றம் தமிழ் இளைஞர்களின் மனதை கொள்ளைக் கொண்டது. இன்றைய நாளில் அதிக அளவு ரசிகர்களை கொண்ட சீரியல் நடிகைகளில் ராதிகா ப்ரீத்தியும் ஒருவர்.
சமீபத்தில் பூவே உனக்காக தொடரை விட்டு விலகிய ராதிகா ப்ரீத்தி சினிமாவில் முழு கவனம் செலுத்தி வருவதாக பேசப்பட்டு வந்தது. அதற்கு காரணம், தமிழில் அவர் நடித்திருந்த 'நாதிரு தின்னா' திரைப்படம் வெளியாவதற்கான முயற்சிகள் தீவிரமடைந்தது. படம் ரிலீஸான பிறகு சினிமாக்களில் அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால் தான் ராதிகா ப்ரீத்தி சீரியலை விட்டு விலகியதாக சொல்லப்படுகிறது. தற்போது ராதிகா ப்ரீத்தி ஹீரோயினாக நடித்துள்ள 'நாதிரு தின்னா' திரைப்படம் வருகிற ஜூலை 8 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனையடுத்து ரசிகர்கள் அனைவரும் ராதிகா ப்ரீத்திக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.