திருமண ரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பூர்ணா | சீரியல் நடிகை வினுஷா தேவி லேட்டஸ்ட் கிளிக்ஸ் | ரெங்கநாயகியாக மாறிய லயா : வைரலாகும் போட்டோஸ் | அநாகரீகமாக பேசிய நெட்டிசனை வச்சு செய்த சுனிதா | சீரியலிலிருந்து விலகிய மனிஷா ஜித் | பாரீஸ் சுற்றுலாவில் பிரியா பவானி சங்கர் | சமந்தாவை நேரில் சந்தித்தால்…. நாக சைதன்யா பதில் | ஆகஸ்ட்டில் மூன்று முக்கிய படங்கள் ரிலீஸ் | டிரணட் ஆகும் சிவன் பாடல் | வசூலை வாரிக் குவிக்கும் சீதா ராமம் |
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்த படம் அவதார். இதன் அடுத்தடுத்த பாகங்கள் உருவாகி வருகின்றன. இரண்டாம் பாகமான ‛அவதார் 2 - தி வே ஆப் வாட்டர்' படம் டிச., 16ல் வெளியாகிறது. இந்த படத்தை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது. ஏற்கனவே படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் இப்போது இந்த படத்தில் ரொனல் என்ற முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் ‛டைட்டானிக்' புகழ் நடிகை கேட் வின்ஸ்லெட். இவரின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதுபற்றி கேட் வின்ஸ்லெட் கூறுகையில், ‛‛ரொனல் வலிமையானவள். ஒரு போர்வீராங்கனை. கடும் ஆபத்தை எதிர்கொண்டாலும், கருவில் இருக்கும் தனது குழந்தையுடன் தன் மக்களுடன் சேர்ந்து போராடுவாள்" என்கிறார்.
ஜேம்ஸ் கேமரூனின் இயக்கிய டைட்டானிக் படத்தில் நடித்த கேட் விஸ்ன்லெட் 25 ஆண்டுகளுக்கு பின் அவதார் 2 படம் மூலம் மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்றி உள்ளார்.