வாரணாசி வெளிநாட்டு உரிமை தான் ராஜமவுலியின் சம்பளம்? | ஆபாச தாக்குதல் : ஈஷா ரெப்பா போலீஸில் புகார் | மூன்றாம் பாகத்தோடு திரிஷ்யம் முடிவடைகிறது : ஜீத்து ஜோசப் | துரந்தர் 2 படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த விக்கி கவுசல், யாமி கவுதம் | யூத் படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகிறது | அதர்வா இரு வேடங்களில் நடிக்கும் ‛வலை' | 2 கோடி வசூலுக்கு 30 லட்சம் கணக்கு சொன்ன வினியோகஸ்தர் : ஆர்கே செல்வமணி அதிர்ச்சித் தகவல் | ‛ஊருக்கு ரெண்டு ஊதாரி' என்ன மாதிரியான படம் | காவல் நிலையத்தில் நடக்கும் கதை | 'லெகசி' வெப் தொடரில் கேங்ஸ்டர் ஆக மாதவன் |

இந்திய அளவில் தங்களது படங்கள் மூலம் வசூலில் சாதனை படைத்தவர்கள் பிரபாஸ், யஷ். 'பாகுபலி 2' படம் மூலம் 1000 கோடி வசூலை பிரபாஸும், 'கேஜிஎப் 2' படம் மூலம் 1000 கோடி வசூலை யஷ்ஷும் கடந்து சாதனை படைத்தார்கள்.
'கேஜிஎப்' படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் மீண்டும் ஆரம்பமாகி நடந்து வருகிறது. இப்படத்தில் 'கேஜிஎப்' நாயகன் யஷ் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கேஜிஎப், சலார் இரண்டு படங்களுமே 'டான்' கதைகள்தான். அதனால் 'சலார்' படத்தில் 'கேஜிஎப்' ராக்கி பாய் கதாபாத்திரத்தை பிரசாந்த் நீல் இணைத்துள்ளதாகச் சொல்கிறார்கள். அதாவது, 'விக்ரம்' படத்தில் 'கைதி' இணைந்தது போல.
பிரபாஸ், யஷ் இருவரும் 'சலார்' படத்தில் இணைந்தால் அதுவே படத்திற்குப் பெரிய விளம்பரமாக அமையும்.




