நடிகையான அமைச்சர் மகள் | ஓடிடியில் சாதனை புரியும் 'துரந்தர்' | கர்நாடக அரசு சோப்பு விளம்பரத்தில் தமன்னா: வலுக்கும் எதிர்ப்பு | பிளாஷ்பேக்: நீதிமன்றத்தில் எதிரிகள், படப்பிடிப்பில் நண்பர்கள் | 50வது நாளில் 'சிறை' | சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு கூட்டணியின் புதிய படம் தள்ளிப்போகிறது? | சசிகுமார் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் ரிலீஸ் செய்கிறது | இனி டாக்டர் ஸ்ரீலீலா | ‛ஓ பட்டர்பிளை' படத்திற்கு ‛மூன்று முடிச்சு' என தலைப்பு வைக்க நினைத்த இயக்குனர் | ரவி மோகனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது : பாடகி கெனிஷா வெளியிட்ட தகவல் |

சென்னை: நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர், கொரோனாவுக்கு பிந்தைய சிகிச்சை எடுத்து வந்த நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர் மீனா. ரஜினி, கமல் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த இவர், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் கடந்த 2009ம் ஆண்டு பெங்களூருவை சேர்ந்த ஐ.டி.,யில் பணிபுரிந்த வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார்.
கடந்த ஆண்டு, மீனா மற்றும் அவரது கணவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. சிகிச்சைக்குப்பின் அவர்கள் மீண்ட நிலையில், கொரோனா பக்கவிளைவுக்கு ஆளான வித்தியாசாகர், தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், நுரையீரல் பாதிப்பு மற்றும் நெஞ்சு வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட வித்யாசாகர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நடிகை மீனாவின் கணவர் மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.