காப்பி போஸ்டர் சர்ச்சையில் சிக்கிய 'ஜனநாயகன்' | ஒரு பக்கம் மராத்தி பாடல், மறுபக்கம் ஆங்கிலப் படம்… இசையால் பேசவைக்கும் இளையராஜா | சினேகா திருமணத்தை நடத்தி வைத்தேன் : இயக்குனர் சேரன் | மல்டிபிளக்ஸ் தியேட்டர்களின் உணவு பொருட்கள் விலை : உச்சநீதிமன்றம் ஆதங்கம் | புதிய அப்டேட் கொடுத்த ராஜமவுலி | 55 வயதான கேஜிஎப் நடிகர் புற்றுநோயால் மரணம் | பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு |

தெகிடி, அவன் இவன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தவர் ஜனனி ஐயர். பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்றார். தற்போது வேழம் படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படம் இந்தவாரம் ஜூன் 24ல் வெளியாகிறது. ஜனனி தனக்கு பெயருக்கு பின்னால் இருந்த ஐயர் என்பதை முன்பே நீக்கிவிட்டு ஜனனி என்று மட்டும் வைத்து கொண்டார். ஆனாலும் தொடர்ந்து பலரும் அவரை ஜனனி ஐயர் என்றே குறிப்பிடுகின்றனர். இந்நிலையில் வேழம் பட பிரஸ்மீட்டில் பேசிய ஜனனி, ‛‛தயவு செய்து இனி என்னை யாரும் ஜனனி ஐயர் என குறிப்பிடாதீர்கள், ஜனனி என்று மட்டுமே கூறுங்கள்'' என்றார். ஜனனியின் இந்த பேச்சை பலரும் வரவேற்றுள்ளனர்.