அமெரிக்காவில் ஜாக்கி சானுடன் ஹிருத்திக் ரோஷன் சந்திப்பு | அஜித் 65வது படத்தை இயக்குவது யார்... புதிய தகவல் | பாண்டிராஜ் படத்தில் ஹரிஷ் கல்யாண்.? | மீண்டும் மோகன்லாலை இயக்கும் தருண் மூர்த்தி ; தொடரும் பட வெற்றி விழாவில் அறிவிப்பு | வி.ஜே.சித்துவின் டயங்கரம் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது | 2025ல் வெளியான படங்களில் 7 மட்டுமே 100 கோடி வசூல் | நானிருக்க, இளையராஜா பாட்டு எதுக்கு: நிவாஸ் கே பிரசன்னா 'ஓபன் டாக்' | பாலிவுட் பிரபலங்களைக் கிண்டலடித்த 'காந்தரா சாப்டர் 1' வில்லன் | தமிழ் சினிமாவிற்கு புதிய வில்லன் | அப்பா கதாபாத்திரங்களையும் அழுத்தமாய் உருவாக்கும் மாரி செல்வராஜ் |

தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகர் சரண்ராஜ். நாயகன், குணசித்திரம், வில்லன் என எல்லாவிதமான கேரக்டரிலும் நடித்தார். சில காலம் நடிப்பை விட்டு ஒதுங்கி இருந்தவர் தற்போது குப்பன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக ரீ எண்ட்ரி கொடுத்திருக்கிறார். இதில் அவர் மகன் தேவ் சரண்ராஜ் நாயகனாக நடிக்கிறார். நாயகியின் தந்தையாக சரண்ராஜ் நடிக்கிறார்.
இன்னொரு நாயகனாக ஆதி தேவ் அறிமுகமாகிறார். இவர்களுடன் சுஷ்மிதா சுரேஷ், பிரியதர்ஷினி அருணாசலம் நாயகிகளாக அறிமுகமாகிறார்கள். ஜனார்த்தனன் ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.ஜி.இளய் இசை அமைக்கிறார். ஒரு குப்பத்து மீனவ இளைஞனுக்கும் மார்வாடி பெண்ணுக்கும் நடக்கும் காதல் கதை. இப்படத்தின் படப்பிடிப்பு, சென்னை பாலவாக்கத்தில் ஆரம்பமாகி விசாகப்பட்டினம், ஐதராபாத் போன்ற இடங்களில் தொடர்ந்து நடந்து வருகிறது.
படம் பற்றி சரண்ராஜ் கூறியதாவது: 35 வருஷமா பாலவாக்கத்தில இருக்கேன். தினமும் நாயை கூட்டிட்டு கடற்கரை வழியா வாக்கிங் போவதுண்டு. அப்போ பல பேர் பழக்கமாகி அங்கு அரட்டை அடிச்சிட்டு தான் வீட்டுக்கு வருவேன். அப்படிதான் குப்பன் என்ற மீனவரின் நட்பு கிடைத்தது. அப்போ தான் தோணிச்சு.. அவர் கதையை நாம ஏன் எழுத கூடாதுன்னு. கதை எழுதி முடிச்சதும் அவரது பெயரையே தலைப்பாக வெச்சுட்டேன். அவரும் இதில் சின்ன கேரக்டரில் நடித்துள்ளார். என்றார்.