ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா இரண்டு அலைகளின் தாக்கம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு இந்த வருடம் மூன்றாவது அலைக்கான வாய்ப்பு குறைவாகவே இருந்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளதாக செய்திகள் தொடர்ந்து வெளியாகின்றன. திரையுலக பிரபலங்கள் சிலரும் தற்போது தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு வருவதாக வெளியாகும் செய்திகள் இதை உறுதிப்படுத்துகின்றன. இந்தநிலையில் லேட்டஸ்டாக நடிகை வேதிகா தனக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதியாகி உள்ளது என்கிற தகவலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “முதன்முறையாக எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.. காய்ச்சல் விட்டு விட்டு அடிப்பது போன்ற சில அறிகுறிகளை வைத்து இதை உறுதி செய்து கொண்டேன். இதுபோன்ற அறிகுறிகள் உங்களுக்கும் இருந்தால் அதை அலட்சியப்படுத்த வேண்டாம். மாஸ்க் இல்லாமல் தயவுசெய்து வெளியே செல்ல வேண்டாம் பின்னால் வருத்தப்படுவதை விட இப்போதே பாதுகாப்பாக இருப்பது நல்லது.. இப்போது ஓரளவுக்கு நன்றாக இருக்கிறேன். விரைவில் குணமடைந்து உங்களை சந்திக்கிறேன்” என்று கூறியுள்ளார்