அவதூறு பரப்பாதீங்க; ரஹ்மான் அற்புதமானவர் - சாய்ரா பானு ஆடியோ வெளியீடு | சூர்யா 44வது படத்தின் புரமோஷனை தொடங்கிய கார்த்திக் சுப்பராஜ் | விவசாயிகளுக்கு விருந்து கொடுத்த நடிகர் விஜய்! | சொர்க்கவாசல் வெளியான பிறகு கைதி-2 கதையை மாற்றுவேன்! -லோகேஷ் கனகராஜ் | தைரியம் காட்டும் அரசியல்வாதி விஜய்: மடோனா சிறப்பு பேட்டி | வெல்லும் வரை காத்திரு: நடிகை குயின்சி ஸ்டான்லி | சிவராஜ் குமாரின் ‛பைரதி ரணங்கள்' நவ. 29ல் தமிழில் ரிலீஸ் | ‛குட் பேட் அக்லி' படத்தை விட்டு வெளியேறிய தேவி ஸ்ரீ பிரசாத்! | தனுஷ் படத்தில் இணைந்த பவி டீச்சர்! | நான் உயிரோடு உள்ளவரை புதுப்பேட்டை 2 முயற்சி தொடரும் - செல்வராகவன்! |
பொறியியல் படித்துவிட்டு வெளிநாட்டில் வேலை பார்த்துவந்தவரான மந்த்ரா வீரபாண்டியன், சினிமா மீதான ஆர்வத்தில் வேலையை விட்டுவிட்டு குறும்படங்களை இயக்கி வந்தார். இயக்குனர் பாலாவின் நாச்சியார் மற்றும் வர்மா படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றினார். தற்போது ஜிஎஸ் சினிமாஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. ‛காம்ப்ளக்ஸ்' என பெயரிடப்பட்டுள்ள இப்படம் குறித்து இயக்குனர் மந்த்ரா வீரபாண்டியன் கூறியதாவது:
இப்படத்தின் மையக்கரு உருவ கேலி செய்வது தவறு என்று சுட்டிக்காட்டும் கதை. அதாவது ஒருவரின் உருவத்தை வைத்து எடை போடுவது மிகவும் தவறு. எல்லா காலகட்டத்திலும் உருவ கேலி என்பது மிகவும் சாதாரணமாகிவிட்டது. இதை வைத்து பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் கூட வருகிறது. மேலும், இதை வைத்து நிறைய நகைச்சுவை காட்சிகளே எடுத்திருக்கிறார்கள். அதைப் பார்த்து பள்ளிகளில் குழந்தைகளும் அதே தவறை செய்கின்றனர். கேலி பேசுபவர்கள் பேசி விட்டு சந்தோஷமா சிரிப்பார்கள். ஆனால், பாதிக்கப்படும் குழந்தைகள் உளவியல் ரீதியாக மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
மேலும், உன்னை யாராவது உருவ கேலி செய்தால் அதை பொருட்படுத்தாமல் நீ வெற்றி பெற்று விட்டால் பிறகு உன்னை யாரும் கேலி செய்ய மாட்டார்கள் என்று தவறான அறிவுரையும் வழங்கப்படுகிறது. இது மிகவும் பரிதாபத்திற்குரியது. ஆகையால், உருவ கேலி செய்வது தவறு என்று விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இப்படத்தை எடுத்திருக்கிறேன். கேலி பேசுபவர்களுக்கு அறிவுரை கூறும் படமாக இருக்காது. மாறாக கேலிக்கு ஆளாகுபவர்கள் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறேன்.
இப்படம் இயக்கும்போது சமுதாயம் எனக்கு மிகப்பெரிய காம்ப்ளக்ஸ் கொடுத்தது. அது என்னவென்றால், இப்படத்தின் கதாநாயகன் யார் என்பது தான். என் கதையில் உள்ள கேரக்டருக்கு பொருந்தக் கூடியவரை நடிக்க வைத்தால் யதார்த்தமாக இருக்கும் என்பதற்காக, உருவம் குறைவுள்ள மனிதரை வைத்து இயக்கி இருக்கிறேன். இந்த யோசனை கூட இயக்குனர் பாலா சாரிடம் நான் கற்றுக் கொண்டது. அதன் அடிப்படையில்தான் இப்படம் உருவாகியுள்ளது. மேலும், பாலா சாரிடம் முக்கியமாக நான் கற்றுக் கொண்டது மேக்கிங் டிஸிப்பிலின் தான். சில விஷயங்களை இப்படி தான் எடுக்க வேண்டும் என்றால் அப்படி தான் எடுப்பார். நானும் அதைப் பின்பற்றி தான் இயக்கியுள்ளேன். விருதுக்கான கலை படமாக இல்லாமல், மக்களுக்கான கமர்ஷியல் படமாக எடுத்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.