சிரஞ்சீவி - நயன்தாரா படக்குழுவை சந்தித்த விஜய் சேதுபதி படக்குழு | ஐஸ்வர்யா ராயை தொடர்ந்து அபிஷேக் பச்சன் வழக்கு: புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி மனு | மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே | என் அழகான ஜென்டில்மேன் நடிகரே : ரவி மோகனை வாழ்த்திய சுதா கெங்கரா! | நயன்தாரா ஆவணப்படம் வழக்கு : பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு | 2 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகியுள்ள மிடில் கிளாஸ் | அஜித் 64 படத்தை குறித்து புதிய தகவல் இதோ | மகுடம் பட பிரச்சனையை சுமூகமாக தீர்த்த விஷால் | சசி, விஜய் ஆண்டனி படத்தலைப்பு நூறுசாமி | மினி இட்லியாக சுவைக்கப்படணும் : பார்த்திபன் ஆசை |
முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள விருமன் படம் சுதந்திர தினத்தன்றும், மணிரத்னம் இயக்கத்தில் நடித்துள்ள பொன்னியின் செல்வன் வருகிற செப்டம்பர் 30ம் தேதியும் திரைக்கு வர உள்ளன. அடுத்தபடியாக பி.எஸ்.மித்ரன் இயக்கும் சர்தார் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார் கார்த்தி. இந்த படத்தில் அவருடன் ராசி கண்ணா, ரஜிஷா விஜயன் மற்றும் மாஜி ஹீரோயினி லைலா ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இந்த சர்தார் படத்தின் முக்கிய காட்சி ஒன்று அஜர்பைஜான் நாட்டின் பார்லிமென்டில் படமாக்கப்பட்டதை அடுத்து தற்போது கிளைமாக்ஸ் காட்சியை படமாக்க பாண்டிச்சேரிக்கு செல்கிறது படக்குழு. இரண்டு வாரங்கள் நடைபெறும் இந்த படப்பிடிப்பை தொடர்ந்து ஜூலை முதல் வாரத்தோடு சர்தார் படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.