'ஜனநாயகன்' டிரைலர் புதிய சாதனையை ஒரே நாளில் முறியடித்த 'பராசக்தி' | கிடப்பில் போடப்பட்ட பீமன் கதையை கையில் எடுக்கும் ரிஷப் ஷெட்டி | 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்த ரிச்சர்ட் ரிஷி - நட்டி | பைக் பயணமாக தனுஷ்கோடிக்கு விசிட் அடித்த மஞ்சு வாரியர் | 20 நிமிடங்கள் வரை ட்ரிம் செய்யப்பட்ட ராஜா சாப் | ஜனநாயகன் படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய அமேசான் பிரைம் | அமெரிக்கா, இங்கிலாந்தில் தி ராஜா சாப் முன்பதிவில் சாதனை | 30 நாட்களில் 1,240 கோடி வசூலித்த துரந்தர் | சிவகார்த்திகேயனுடன் பேசுவதைத் தவிர்த்தாரா விஜய் ? | லோகா வாய்ப்பை மறுத்தீர்களா ? கேள்வியால் டென்ஷனான பார்வதி |

சோஷியல் மீடியாவில் எதையாவது பேசி சர்ச்சையை கிளப்பி வருகிறார் ஸ்ரீநிதி. அவர் சமீபத்தில் தனது தோழியும் சக நடிகையுமான நக்ஷத்திராவை பற்றி பேசிய தகவல்கள் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு மறுப்பு தெரிவித்திருந்த நக்ஷத்திரா, ஸ்ரீநிதி மனக்குழப்பத்தில் இருக்கிறார். அவர் பேசுவதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என தெரிவித்திருந்தார். இருப்பினும் நக்ஷத்திராவின் வருங்கால கணவர் யார்? உண்மையில் நக்ஷத்திரா மாட்டிக்கொண்டு தவிக்கிறாரா என்ற கேள்விகள் சில ரசிகர்களிடம் இருந்தது. இந்நிலையில், இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நக்ஷத்திராவின் வருங்கால கணவரே விளக்கமளித்துள்ளார்.
நக்ஷத்திராவின் காதலர் பெயர் விஷ்வா. பொதுவெளியில் அதிகம் அறியப்படதா இவர், சினிமா தயாரிப்பாளரான சேவியர் ப்ரிட்டோ குடும்பத்திற்கு நெருங்கிய நண்பரும் ஆவார். அந்த வகையில் ஜீ தமிழில் சேவியர் ப்ரிட்டோ நிறுவனம் தயாரிக்கும் சீரியல்களில் நிர்வாக தயாரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார். அப்படித்தான் ஜீ தமிழ் சீரியலில் நடித்து வந்த நக்ஷத்திராவுக்கும் விஷ்வாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீநிதியின் சர்ச்சை கருத்துகளுக்கு அண்மையில் பதிலளித்துள்ள விஷ்வா, 'சமீப காலமாக ஸ்ரீநிதி மன அழுத்தத்தில் ஏதேதோ பேசி வருகிறார். என் குடும்பத்தை பற்றி அவர் சொன்னது எதுவுமே உண்மை கிடையாது. விரைவில் நாங்கள் முறைப்படி எங்கள் திருமணம் குறித்து மீடியாவுக்கு அறிவிக்க இருக்கிறோம்' என்று கூறியுள்ளார்.